ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! வெயிட்லிஸ்ட் டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? ரயில்வே அதிரடி திட்டம்!
பயணிகளிடமிருந்து இந்த கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது குறித்து ரயில்வே நிர்வாகம் தற்போது மறுபரிசீலனை செய்து வருகிறது.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.

ரயில் பயணிகளுக்கு விரைவில் குட் நியூஸ் காத்திருக்கிறது. வெயிட்லிஸ்ட் டிக்கெட்டுகளை ரத்து செய்வதில் வசூலிக்கப்படும் எழுத்தர் கட்டணத்தை (clerkage charge) குறைக்க அல்லது முற்றிலுமாக நீக்க இந்திய ரயில்வே இப்போது திட்டமிட்டுள்ளது. ரயில்வேயின் இந்த முயற்சி, டிக்கெட்டுகள் உறுதிபடுத்தப்படாத பயணிகளுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும். தற்போது வெயிட் லிஸ்ட் டிக்கெட் ரத்து செய்யும் போது, பணத்தைத் திரும்பப் பெறும் நேரத்தில் அவர்களிடம் எழுத்தர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு செயல்முறைக்கான செலவை குறைத்துள்ளது. இந்நிலையில், பயணிகளிடமிருந்து இந்த கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது குறித்து ரயில்வே நிர்வாகம் தற்போது மறுபரிசீலனை செய்து வருகிறது.
எழுத்தர் கட்டணம் (clerkage charge) இப்போது எவ்வளவு வசூலிக்கப்படுகிறது? டிக்கெட்டை ரத்து செய்தால், எழுத்தர் கட்டணம் என்ற வகையில், குறிப்பிட்ட தொகையை ரயில்வே எவ்வாறு கழிக்கிறது என்றால் ஏசி மற்றும் ஏசி அல்லாத முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளில் ரூ.60 முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளில் ரூ.30 நீங்கள் ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது செயலியில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தாலும், இந்தக் கட்டணம் பொருந்தும். இது தவிர, ஐ.ஆர்.சி.டி.சி தனியாக கன்வீனியஸ் சார்ஜ் என்னும் கட்டணத்தையும் வசூலிக்கிறது. ஏ.சி டிக்கெட்டுகளுக்கு ரூ.30, ஏ.சி அல்லாத டிக்கெட்டுகளுக்கு ரூ.15 என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது. முன்பதிவு முறையை இயக்குவதற்கான செலவை எழுத்தர் கட்டணம் ஈடுகட்டுவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தத் தொகை ரயில்வேயின் பராமரிப்பு, செயல்பாடு மற்றும் மேம்படுத்தல் நிதிக்கு நேரடியாகச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1, 2025 முதல் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை ரயில்வே கடுமையாக்கியுள்ளது. இப்போது தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, உங்கள் அடையாளத்தையும் சரிபார்க்க வேண்டும். இதற்காக, ஆதார் அட்டை அல்லது டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்ட பிற அரசாங்க அடையாள அட்டையையும் பயன்படுத்த வேண்டும். ஜூலை இறுதிக்குள் OTP அடிப்படையிலான சரிபார்ப்பு முறை புதிய விதிகள் முன்பதிவு முறையை மிகவும் பாதுகாப்பானதாக்கும் மற்றும் டிக்கெட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இதனுடன், ஜூலை இறுதிக்குள் OTP அடிப்படையிலான சரிபார்ப்பு முறையையும் செயல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





















