மேலும் அறிய
Advertisement
பெண் குழந்தையை தத்தெடுத்தவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் - காப்பகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தத்தெடுத்தவர்கள் சில விதிகளை பின்பற்றத் தவறியதை காரணமாக வைத்து குழந்தையை அரசு வளர்க்க முடியாது - நீதிபதிகள்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். இவர் தெலுங்கானா மாநிலத்தில் இட்லி கடை நடத்தி வந்தார். அப்போது அவருக்கும், மகாதேவிக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் பெண் குழந்தை ஜிதிஷாவை தத்தெடுத்தனர். பின்னர் அவர்கள் ஜிதிஷாவுடன் மதுரை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்து வசித்தனர். இந்த நிலையில் ஜிதிஷாவை சட்டவிரோதமாக மதுரைக்கு அழைத்து வந்ததாக காசிவிஸ்வநாதன், மகாதேவி மீது குழந்தைகள் நலக்குழு சார்பில் சேடபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
காசிவிஸ்வநாதன் சார்பில் மனு :
அதனடிப்படையில் குழந்தை ஜிதிஷாவை கைப்பற்றிய குழந்தைகள் நலக்குழுவினர், கருமாத்தூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காசிவிஸ்வநாதன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ''ஜிதிஷாவை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு பிறப்பித்த உத்தரவை 2 ஆண்டுகளாக கடைபிடிக்காதது வருத்தத்தை தருகிறது. சில விதிகளை பின்பற்றத் தவறியதை காரணமாக வைத்து, அந்த குழந்தையை அரசு வளர்க்க முடியாது'' என்று கூறியுள்ளனர்.எனவே ஜிதிஷாவை காசிவிஸ்வநாதன் தம்பதியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
மற்றொரு வழக்கு
பாளையங்கோட்டை சிறையிலுள்ள கணவருக்கு மகளின் திருமணத்தில் பங்கேற்க 1 வாரம் பரோல் வழங்கக் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கவுரி. பாளையங்கோட்டை சிறையிலுள்ள தனது கணவன் சங்கருக்கு மகளின் திருமணத்தில் பங்கேற்க ஒரு வாரம் பரோல் வழங்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "எனது கணவர் செங்கன் என்ற சங்கர் ஒரு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் எனது மகளுக்கு திருமணம் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் எனது கணவர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்திடும் வகையில் அவருக்கு ஒரு வாரம் அவசர பரோல் வழங்கும்படி சிறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, எனது கணவருக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
3 நாட்கள் மட்டும் பரோல் !
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரர் கணவருக்கு 3 நாட்கள் மட்டும் பரோல் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion