மேலும் அறிய

தேனி : கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூன் மாத மின் உற்பத்தி அதிகரிப்பு..

முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் லோயர்கேம்பில் உள்ள மின் நிலையத்தில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூனில் முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேனி ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை . இந்த அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதானமாக நெல், வாழை, தென்னை, மருத்துவகுணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை என விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதில் முக்கிய பங்காக நெல் விவசாயம் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கான உழுதல் நாற்று நடுதல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர் இந்நிலையில் சென்ற ஜூன் முதல் வாரமான கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு உத்தரவின் பேரில் தேனி மாவட்ட முல்லைப் பெரியாற்று பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக விவசாயத்திற்கான சாகுபடி செய்தலுக்கு நாத்து நடுதல் போன்ற பணியில் விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இன்னிலையில் முல்லை பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவ மழையும் தீவிரமடைந்துள்ளது.


தேனி : கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூன் மாத மின் உற்பத்தி அதிகரிப்பு..

இதன் எதிரொலியாக அணையில் நீர்பிடிப்பு பகுதியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் ஆனது 134 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1318 கன அடியாகவும் , அணையில் மொத்த நீர் இருப்பானது5680 கன அடியாகவும்  கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கும் தேனி மாவட்ட மக்களின் குடி நீருக்காகவும் அணையிலிருந்து 1867 கன அடி திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் நீர் வரத்து மற்றும் நீர் திறப்பு அதிகரிக்க தொடங்கியதால் லோயர்கேம்பில் உள்ள  நீர் மின் நிலையத்தில் முதல் முறையாக ஜூன் மாதத்தில் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

தேனி : கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூன் மாத மின் உற்பத்தி அதிகரிப்பு..

இந்த நீர்மின் நிலையத்தில் உள்ள தலா 42 வீதம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். தற்போது அணையில் திறக்கப்பட்டுள்ள 1867 கன அடிநீர் மூலம் 168 மெகாவாட் முழுமையான மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் நீர்திறப்பு 1400 கன அடிக்கும் கூடுதலாக இருந்த பல மாதங்கள் முழுமையான மின்உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் ஜூனில் முழு அளவில் மின் உற்பத்தி செய்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது  பருவ மழை தீவிரம் அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், நீர் திறப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Embed widget