மேலும் அறிய
Advertisement
நிதி மற்றும் நிர்வாக முறைகேடு புகார் : மதுரையில் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சர்மிளா ஜி என்பவர் அரசு நிதியை முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டதாக கூறி அவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் திருமதி சர்மிளா ஜி மோகன். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றார்.
#மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஜி ஷர்மிளா ஜி தேவியை தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.Further reports to follow @abpnadu #madurai | #அலங்காநல்லூர்| @UpdatesMadurai | @mducollector | @aneeshsekhar pic.twitter.com/QkQLgYe3Vl
— Arunchinna (@iamarunchinna) June 6, 2022
வெற்றிக்குப் பின் கடந்த சில மாதங்கள் முன் தி.மு.க.,வில் இணைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்ற சில நாட்களில் அரசு ஊராட்சிக்கு வழங்கும் நிதியை முறைகேடாக தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி முறைகேடு செய்துள்ளதாக கூறி அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கருப்பசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து புகார் தொடர்பாக ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவரான சர்மிளா ஜியிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் உரிய விளக்கமளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்தபடியாக வாடிப்பட்டி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் கிராம நிதி பதிவேட்டை தணிக்கை செய்தனர். இதில் முறைகேடு உறுதியானது சுமார் 10 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்தது உறுதியானது. எனவே 1994 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 205ன் கீழ்முறைகேடு உறுதியானதால் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து சர்மிளா ஜி மோகன் என்பவரை பதவிநீக்கம் செய்ய ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதற்குப்பின் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் கோட்டைமேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது ஊராட்சி மன்ற தலைவர் பணிகளை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: “கோயிலுக்குள் அரசியல்; உண்டியல் பணம் எங்க போகுது?” - அமைச்சர் சேகர்பாபுவை வெளுத்துவாங்கிய மதுரை ஆதீனம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion