மேலும் அறிய
Advertisement
மேடையில் பேசும் போது கண் கலங்கி பேச்சை முடித்து கொண்ட திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் !
எங்கள் பகுதியில் நடைபெறும் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் வெறும் பார்வையாளராக மட்டுமே ஒதுங்கி நின்றேன். இந்தியர்கள் கொண்டாட்ட மனநிலை உள்ளவர்கள் அதில் நாம் எங்கே இருக்கிறோம் என்ற கேள்வி எழும்பியது
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தலித் இலக்கிய இரண்டு நாள் கூடுகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில் தலித் இலக்கியம் தொடர்பாக நூல்களை எழுதி வரும் நூல்களின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உரை நிகழ்த்த வருகின்றனர். பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் வரவேற்புரை மேடையில் வழங்கினார். எல்லா இடத்திலும் ஒடுக்குதல் இருந்ததை உணர்ந்து. அதில் இருந்து எப்படி நகர்த்துவது என்பதை பார்த்த போது இலக்கியங்களை வாசிக்க தொடங்கினேன். தலித் எழுத்துகள்தான் என்னை செதுக்கியது. அது இல்லை என்றால் நான் என்ன ஆகி இருப்பேன் என என்னால் சொல்ல முடியவில்லை. ஆப்பிரிக்க இலக்கிய எழுத்துகளுடன் என்னை எளிதில் இணைக்க முடிந்தது, அதனை வாசித்து என்னை நானே விசாரணைக்கு உட்படுத்தினேன்.
எங்கள் பகுதியில் நடைபெறும் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் வெறும் பார்வையாளராக மட்டுமே ஒதுங்கி நின்றேன். இந்தியர்கள் கொண்டாட்ட மனநிலை உள்ளவர்கள் அதில் நாம் எங்கே இருக்கிறோம் என்ற கேள்வி எழும்பியது. எங்களது கொண்டாட்டம் காலனி, எங்கள் பகுதி என குறுகிய வட்டத்திலேயே இருந்தது. ஆனால் அந்த கொண்டாட்டத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் எங்களது கொண்டாட்டம் இருந்தது. இதை தலித் இலக்கிய வாசிப்பின் வழியாக என்னால் அதை புரிந்து கொள்ள முடிந்தது. பல தலித் எழுத்தாளர்களின் எழுத்துகள் எனக்குள் நாம் யாருக்கும் குறைவில்லாமல் வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்டவர்கள் வரலாறு குறித்த நூல்கள் மிக முக்கியமானது.
தலித் வாழ்க்கை இசை, ஓவியம், உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களுடன் என்னால் இணைத்து பார்க்க முடிந்தது. இதை ஒரு விவாதமாக மாற்ற வேண்டும் என்பதால்தான் இது தொடர்பாக புகைப்பட கண்காட்சி, திரைப்பட கண்காட்சி, இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம். தற்போது இந்த தலித் இலக்கிய கூடுகையை ஏற்பாடு செய்து உள்ளோம். கூடிய விரைவில் அரசியல் கூடுகை நடத்த வேண்டும் அடுத்த ஆண்டு இதை செய்ய வேண்டும். அனைத்து அரசியல் தலைவர்களையும் ஒருங்கிணைத்து என்ன செய்து வருகிறார்கள் என பேச வைக்க வேண்டும். என்னைச் செதுக்கியது இந்த வேர்ச் சொல் மாதிரியான தலித் இலக்கியங்கள்தான். அந்த டாக்மெண்ட் தான். எங்களின் மகிழ்ச்சி, சோகம், அழுகை, கொண்டாட்டம், என எல்லாவற்றிக்கு காரணம். உங்களின் தலித் தொடர்பான டாக்மெண்டால்தான் நான் ஒரு ஆளாக, மனிதனாக இருக்கிறேன். அதற்கு நீங்கள்தான் காரணம் என பேசும் போது அவர் தன்னை அறியாமல் உணர்ச்சி பொங்கி கண் கலங்கி பேச்சை நிறுத்திக் கொண்டு சென்று அமர்ந்தார். பின் கண்ணீர் துடைத்துக் கொண்டார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், இளையராஜா கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய நபர்களின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அதை எதிர்க்கிறோம். இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும். திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது இப்போது முக்கியம். இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. இந்தியாவை வட இந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்கிறார்கள். தென் இந்தியர்களை விட, வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உள்ளது. இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம் என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion