மேலும் அறிய

”மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச் செயலாளராக முடியும்” - டி.டி.வி.தினகரன் மதுரையில் காட்டம்..

தற்போதுள்ள நிலையில் அதிமுக யார் அதிகமாக பணம் கொடுக்கின்றோரோ அவரே தலைமைக்கு வரும் நிலை உள்ளதால் ஸ்டாலின் கூட தலைமைக்கு வரலாம் என்ற அவலநிலையில் உள்ளது’ - டி.டி.வி தினகரன் பேச்சு.

மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக சார்பில் அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், ”கன்னியாகுமரி முதல் ஒசூர் வரை 234 தொகுதிகளிலும் அமமுகவின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

”மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச் செயலாளராக முடியும்” - டி.டி.வி.தினகரன் மதுரையில் காட்டம்..
 
தொண்டர்களை வைத்து அம்மாவின் திருப்பெயரிலயே அமமுக செயல்பட்டுவருகிறது. மக்களின் பணத்தை தண்ணீராக செலவழித்து கொண்டீருந்தவர்கள் அம்மா, எம்.ஜி.ஆர் இருந்த தலைமை பதவியை பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார். வைத்தியலிங்கம் கூறியிருக்கிறார் காசுகொடுத்துதான் எடப்பாடி பழனிச்சாமி தலைமை பதவியை ஏலம் போட்டு அம்மா, எம்ஜிஆருக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி நீதிமன்றத்தில் குடுமிபிடி சண்டையில் உள்ளது.

”மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச் செயலாளராக முடியும்” - டி.டி.வி.தினகரன் மதுரையில் காட்டம்..
எந்த வழக்கில் சிறைக்கு செல்ல போகின்றாரோ என்ற அச்சத்துடன் ஈபிஎஸ் அணி இருந்துவருகிறது. ஆட்சியில். இருந்தபோது மக்கள் பணத்தை கொள்ளையடித்து உப்பை திண்டவன் தண்ணி குடித்துக்கொண்டிருக்கின்றனர். யார் காலையாவது பிடித்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, தலைமை பதவியை தவறான பணத்தின் மூலம் கிடைத்துள்ளது. இது அவருக்கு உதவி செய்வதில்லை. உண்மையாவின் அம்மாவின் இயக்கம் அமமுக தான், உடல் அங்கும், உள்ளம் இங்கும் என்ற நிலையில் தான் சிலர் அதிமுகவில் உள்ளனர். விரைவில் அவர்கள் வருவார்கள். அதிமுக கம்பெனி போல ஆகிவிட்டது, யார் அதிகமாக இன்வெர்ஸ்ட் பண்ணுகிறாரோ அவர் தலைமை ஆகிறலாம். ஸ்டாலின் நினைத்தால் கூட அங்கே பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற அவல நிலைதான் உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்த பின் அம்மாவின் பெயரில் கட்சியை தொடங்கவேண்டும் என எண்ணினேன்.

”மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச் செயலாளராக முடியும்” - டி.டி.வி.தினகரன் மதுரையில் காட்டம்..
 
அம்மா மறைவிற்கு பின் நடந்தது அம்மாவின் ஆட்சியும் அல்ல; கட்சியும் அல்ல; அம்மாவின் ஆட்சியை தவறாக செய்தார்கள் அதனால் அவர்களை கண்டித்தேன். ஆர்கேநகரில் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை; அந்த காலகட்டத்தில் தளவாய்சுந்தரம் போன்றோர் தான் பொதுச்செயலாளர் சின்னம்மாவை சந்தித்து என்னை தேர்தலில் நிற்க வேண்டும் என கூறினார்கள்.  எடப்பாடி அணியினரை ஊழல் செய்யாதிங்கனு சொன்னேன் ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் தனிக்கட்சி்தொடங்க எண்ணினேன், தற்போது எடப்பாடி அணியினர் செய்த ஊழலுக்கு நாள்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.  எடப்பாடி அணியினர் மடியிலயே டன் கணக்கில் பயம் உள்ளது. பதிவியை காப்பாற்ற மட்டுமே உள்ளனர், தொண்டர்களையோ, அம்மாவின் ஆட்சியை காப்பாற்றமாட்டார்கள். வினை விதைத்தவர்கள். வினை அறுப்பான் என்ற நிலையை அனுபவிப்பார்கள்.

”மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச் செயலாளராக முடியும்” - டி.டி.வி.தினகரன் மதுரையில் காட்டம்..
நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பு இல்லை, நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அவர்களது காலத்திலயே அழிந்துபோவார்கள். மகேந்திரன் , முருகன் , டேவிட் அண்ணாத்துரை போன்றோர் தேர்தலில் தோற்றாலும் சோர்ந்துபோகவில்லை; பதவி என்பதை எதிர்பார்த்தவர்கள் தான் நம்மிடம் இருந்து ஓடிவிட்டனர். அமமுக ஆட்சிக்கு வந்தால்தான் ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்க முடியும்.  5வருடத்தில். 3பொதுச்செயலாளரை மாற்றிவிட்டார்கள். அதிமுக தொண்டர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிமுகவை மீட்டெடுப்பவர்கள் அமமுகவினர்தான். அதிமுகவின் சண்டையை கண்டுகொள்ளவேண்டாம், நமது சின்னம் குக்கரையும், அமமுகவின் கொடியையும் பட்டி தொட்டி எங்கும் எடுத்துசெல்லவேண்டும்.
 
உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். அம்மாவின் உண்மையான இயக்கம் அமமுகதான்.  யாருக்காகவும் பின்வாங்க போவதில்லை, யாரோடும் சமரசம் செய்வதில்லை, அம்மாவின் ஆட்சியை அமமுக தலைமையில் கொண்டுவருவேன்,  தொண்டர்களை மட்டுமே நம்பி கழகத்தை நடத்திவருகிறேன்” என்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
Embed widget