மேலும் அறிய
Advertisement
அரக்க குணம் உடையவர்களுக்கு கருணை காட்ட கூடாது - மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
’’அர்ஜுனனிடம் எதிரிகளை அம்புகள் எய்து கொல்லாமல் இருந்தாலும் அவர்கள் என்றைக்காவது ஒருநாள் உலகைவிட்டுப் போகத்தான் போகிறார்கள் என்பார்’’
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் பூ வியாபாரிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதிசெய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ‘‘அரக்க குணம் உள்ளவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டக்கூடாது. அவர்களை திரும்பவர முடியாத உலகிற்கு அனுப்ப வேண்டும்” என கருத்தும் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி சாமிவேல் என்கிற ராஜா (26), 2019ஆம் ஆண்டு வீட்டில் தனியே இருந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்தார். இது தொடர்பாக ஏம்பல் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் மற்றும் கொலை வழக்கு, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, சாமிவேலை கைது செய்தனர். இந்த வழக்கில் சாமிவேல் என்ற ராஜாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகளா நீதிமன்றம் 29.12.2020-ல் தீர்ப்பளித்தது. இந்தத் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தக்கோரி, ஏம்பல் காவல் ஆய்வாளர் சார்பிலும், சாமிவேல் தரப்பில் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில் “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார் சாமிவேல் என்ற ராஜா. அவரைப் போன்றவர்களை வாழ அனுமதித்தால், அவர் சிறையில் உடன் இருக்கும் கைதிகள், குறிப்பாக விடுதலையாகும் நிலையில் உள்ள கைதிகளின் மனதைக் கண்டிப்பாகக் கெடுத்து விடுவார். அரக்க குணம் உள்ளவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டக்கூடாது. இவர்களைப் போன்றவர்களுக்கு கண்டிப்பாகத் தண்டனை வழங்க வேண்டும். அவர்களை திரும்பவர முடியாத உலகுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த வழக்கில் தூக்கு தண்டனையை உறுதிசெய்ய முதலில் தயங்கினோம். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றுகூட யோசித்தோம். அப்போது கிருஷ்ணரின் கீதாஉபதேசம்தான் நினைவுக்கு வந்தது. அதில், அர்ஜுனனிடம் எதிரிகளை அம்புகள் எய்து கொல்லாமல் இருந்தாலும் அவர்கள் என்றைக்காவது ஒருநாள் உலகைவிட்டுப் போகத்தான் போகிறார்கள் என்பார். மேலும், ஒருவருக்கு குறிப்பிட்ட பணி வழங்கப்பட்டிருக்கும்போது, அவர் அந்தப்பணியை பயம் இல்லாமலும், பாரபட்சம் இல்லாமலும் நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில் இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சரியாக விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. கீழமை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளனர்.
கொரோனா சாதாரன காய்ச்சல் என பதிவிட்டதால் மருத்துவருக்கு விதிக்கப்பட்ட தடை - தடைக்கு இடைக்கால தடைக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு
கொரோனா சாதாரண காய்ச்சல் என்ற கருத்தை பதிவிட்டதால், ஒரு ஆண்டுக்கு மருத்துவர் தொழில் செய்யக்கூடாது என விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்கால தடை கோரி மருத்துவர் ஜான்சன் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.ஜாக்சன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து, 1999 முதல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். ஜனநாயக ஊழல் ஒழிப்பு முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறேன். கட்சி நிதியில் சென்னையில் இலவச மருத்துவ மையம் நடத்தி வருகிறேன். இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வாட்ஸ்அப் வீடியோ ஒன்றை வெளியிட்டேன்.
இதையடுத்து அரசு மற்றும் கரோனா தொற்று நடவடிக்கைகளை விமர்சித்ததாக என் மீது குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தியும், மருத்துவ கவுன்சில் பதிவேட்டில் இருந்து எனது பெயரை இடைக்காலமாக நீக்கி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து, என் மீதான புகாரை முறைப்படி விசாரிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் நான் ஒரு ஆண்டுக்கு மருத்துவர் தொழில் செய்ய தடை விதித்து மருத்துவ கவுன்சில் 28.4.2021-ல் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு வாதிடுகையில், கொரோனா சாதாரண காய்ச்சல் என்று தவறான கருத்துக்களை மனுதாரர் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். இதையடுத்து விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion