மேலும் அறிய

திமுகவுக்கு வாய் பூட்டு! எங்களிடம் 38 எம்.பிக்கள் இருந்திந்தால்...! - சரமாரியாக சாடிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

அதிமுக சார்பில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருந்தால் பேரிடர் நிதியை கொடுத்த பிறகு தமிழகத்திற்கு வாருங்கள் என பிரதமரிடம் கூறியிருப்போம் என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
 
தமிழ்நாட்டில் நிலவும் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தி.மு.க., தலைமையிலான தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி மதுரையில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, எம்.எல்.ஏ க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான்  உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க..,வினர் பங்கேற்றனர், சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில் "போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக்கை தி.மு.க., அரசு பாதுகாத்து வருகிறது. தமிழகத்திலிருந்து போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்றால் திமுகவை ஒழிக்க வேண்டும்” என பேசினார்.
 
ஆர்.பி.உதயகுமார்
 
ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்..," போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டுள்ளது. தமிழகத்திலிருந்து உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கூறிய அறிவுரைகளை முதலமைச்சர் ஏற்று கொண்டு இருந்தால் எந்த ஒரு பிரச்னையும் ஏற்பட்டிருக்காது. திமுகவின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேரிடர் நிதியை வழங்க வலியுறுத்தி ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?, அதிமுக சார்பில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்போம், பேரிடர் நிதியை கொடுத்த பிறகு தமிழகத்திற்கு வாருங்கள் என பிரதமரிடம் கூறியிருப்போம், காவிரி விவகாரத்தில் திமுக அரசு தோல்வி அடைந்திருக்கிறது, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசுக்கு நிதி வழங்க விருப்பமில்லை, மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற திமுக அரசுக்கு தகுதி இல்லை" என பேசினார்.
 
செல்லூர் கே.ராஜூ
 
செல்லூர் கே.ராஜூ பேசுகையில் "போதைப் பொருள் கடத்தலில் உலகத்திற்கே வழிகாட்டியாக திமுக திகழ்கிறது, ஆங்கில படங்களில் சொல்வது போதை பொருள் கடத்தலில் போல கிங் ஆப் கிங்காக ஜாபர் சாதிக் விளங்கி இருக்கிறார். ஜாபர் சாதிக் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தான் 4 நிறுவனங்களை தொடங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார், ஜாபர் சாதிக் திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்ததால் காவல்துறையினர் அவரை நெருங்க முடியவில்லை, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் யாரும் பிடிக்க முடியாத சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு பிடித்தது தமிழ்நாடு காவல்துறை, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதி கூட தமிழக டிஜிபி தொடர்பில் இருக்கிறார், திமுகவிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கட்சிகளை அடமானம் வைத்து விட்டது, திமுகவின் கூட்டணி கட்சிகள் செந்தில் பாலாஜி கைதுக்காக மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்தது. திமுக உடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லை.  திமுக ஆட்சி என்றைக்கு வீட்டுக்கு செல்கிறதோ அன்றைக்குத்தான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம், 5 ஆண்டுகளில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் குளுகுளு ஏசியில் அமர்ந்து விட்டு படிக்காசை வாங்கி கொண்டு வருகிறார்கள், தமிழகத்தில் உள்ள சமூக விரோதிகள் அனைவரும் திமுகவில் அங்கம் வகிக்கிறார்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் 2026 க்கு முன்னரே திமுக ஆட்சி கலைக்கப்படும்" என பேசினார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Embed widget