மேலும் அறிய

திண்டுக்கல் : மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நடந்த சாலை விபத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. திண்டுக்கல் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு மேற்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சாலமன்ராஜா (48)  மற்றும் அந்தோணி அருள்ராயர் (35). ஆகியோர் ஏ.வெள்ளோட்டில் இருந்து நரசிங்கம்பட்டி, கல்லுப்பட்டி வழியாக திண்டுக்கல் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.  

திண்டுக்கல் : மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
 
திண்டுக்கல் யாகப்பன்பட்டி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று இரண்டு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. அப்போது வாகனத்தில் இருந்து சாலமன்ராஜா, அந்தோணி அருள்ராயர் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அந்தோணி அருள்ராயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாலமன்ராஜா படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். 

திண்டுக்கல் : மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
 
இந்த விபத்தின்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திண்டுக்கல் புறநகர் துணை கண்காணிப்பாளர் இலக்கியா, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிருக்கு போராடிய சாலமன் ராஜாவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான அந்தோணி அருள்ராயர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதற்கிடையே மருத்துவமனையில் சாலமன் ராஜாவை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  விபத்தில் பலியான சாலமன் ராஜாவுக்கு ஜோஸ்பின் கிளாரா (45) என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அந்தோணி அருள்ராயருக்கு  மரியசெல்வம் (34) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 கூலித்தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget