துண்டு, துண்டாக வெட்டப்பட்ட உடல்பாகங்கள், 48 மணி நேரத்தில் கொலை குற்றவாளிகளை தட்டி தூக்கிய போலீஸ்.
கொடைக்கானலை உலுக்கிய காட்டேஜ் உரிமையாளர் படுகொலை கொலையாளிகளை 48 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடிய கொடைக்கானலில் குற்ற வழக்குகள் குறைந்த அளவே காணப்பட்டு வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கொடைக்கானலை தலைகீழாக பிரட்டி போட்டு பரபரப்பாகியது காட்டேஜ் உரிமையாளர் கொலை வழக்கு.
கொடைக்கானல் பெரும்பள்ளம் பகுதியில் எஸ்எஸ் காட்டேஜ் என்ற தனியார் தங்கும் விடுதி உள்ளது. காட்டேஜின் உரிமையாளர் சிவராஜ் வயது 60 தந்தை சங்கர், சிவராஜ் அளவுக்கு அதிகமாக மது எடுத்து வந்ததால் அவரை மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்துள்ளார் .கடந்த இரண்டு ஆண்டுகளாக மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது நண்பர்களாக இணைந்தவர்கள் தான் மணிகண்டன், சந்தோஷ், அருண் இவர்கள் மூன்று பேருக்கும் 30 வயது உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் நட்பு ஏற்பட்ட சிவராஜ் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கொடைக்கானலுக்கு தன்னுடைய தங்கும் விடுதியை கோடை காலத்திற்கு தயார் செய்வதற்காக வந்துள்ளார்.
தன்னுடன் மதுரையில் மறுவாழ்வு மையத்தில் இருந்த மணிகண்டன். சந்தோஷ் மற்றும் அருணை கொடைக்கானலில் அமைந்துள்ள தன்னுடைய தங்கும் விடுதிக்கு வேலைக்கு அழைத்துள்ளார். மணிகண்டன் சந்தோஷ் மற்றும் அருண் கொடைக்கானல் சிவராஜ் தங்கும் விடுதியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கொலையாளிகளின் நண்பரான ஜோசப் பிராங்க்ளினை மதுரையிலிருந்து கஞ்சா வாங்கி வா என்று கூறியுள்ளனர் . ஜோசப் மதுரையில் இருந்து கஞ்சாவை வாங்கி கொடைக்கானலுக்கு எடுத்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பெரும்பள்ளம் பகுதியிலுள்ள எஸ் .எஸ். காட்டேஜ் பகுதியில் கடந்த 21ஆம் தேதி காட்டேஜில் ஐந்து பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தனியார் தங்கும் விடுதியில் அமைந்துள்ள சமையலறையில் மணிகண்டன் சமைக்கும் பொழுது சிவராஜ் மணிகண்டனை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் மணிகண்டனை பார்த்து சிவராஜை நீ அடிக்கிறயா அல்லது நான் அடிக்கட்டுமா என்று ஆத்திரத்தில் கத்தியுள்ளான். சிவராஜ் அருகில் இருந்த மணிகண்டன் சிவராஜை இருக்கையை எடுத்து தாக்கியபோது நிலைகுலைந்து சிவராஜ் கீழே விழுந்து விடுகிறார் . மணிகண்டன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் சிவராஜ்ஜை அறைக்குள் இழுத்துச் சென்று இரும்பு கம்பிகள் மற்றும் அங்கு இருக்கக்கூடிய பொருள்களை வைத்து கடுமையாக தாக்கி, சிவராஜை துண்டு துண்டாக வெட்டி அறையை விட்டு வெளியே எடுத்து வந்து சுற்றுலாப் பயணிகள் குளிர் காய பயன்படுத்தப்படும்( camp fire) கேம்ப பையர் ஏரியாவில் வைத்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை ஒன்றன்பின் ஒன்றாக நெருப்பில் வைத்து எரித்துள்ளனர்.
இரவு முழுவதும் எரிக்கப்பட்ட உடல்கள் அதிகாலை 5 மணிக்கு மேல் பாதியாக தலை, கை மற்றும் நெஞ்சு மீதி இருந்த உடல் பாகங்களை அருகில் இருக்கக்கூடிய புதர் பகுதியில் வீசி சென்றனர். சிவராஜின் உடலை துண்டு, துண்டாக வெட்டி கேம்பயர் ஏரியாவில் எரித்து சாம்பலாக்கிய கொலை சம்பவத்தால் கொடைக்கானல் மக்கள் இடையே அச்சத்தையும் பரபரப்பாகியது. இந்த வழக்கை குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில், காவல்துறை கண்காணிப்பாளர் மதுமதி மற்றும் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் தனி படைகள் அமைத்து 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் கைது செய்து அதிரடி காட்டியுள்ளது கொடைக்கானல் காவல்துறையினர்.