மேலும் அறிய

கொடைக்கானல் வருவோருக்கு எச்சரிக்கை... வாகனங்களில் நெகிழி பயன்படுத்தினால் பெர்மிட் ரத்து

நெகிழிகள்,  5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில்கள் மலைப்பகுதியில் உபயோகப்படுத்தினால் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு. 86-ன் கீழ் அனுமதி சீட்டு(வாகன பெர்மிட்) ரத்து.

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் ஐந்து லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில்கள் வாகனங்களில் கொண்டு செல்லவும், உபயோகிப்பதற்கும் தடை விதித்துள்ள நிலையில், இதனை மீறி வாட்டர் பாட்டில்கள், நெகிழி கொண்டு செல்லும் வாகனங்களின் அனுமதி சீட்டு(வாகன பெர்மிட்) ரத்து செய்யப்படும் என  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.


கொடைக்கானல் வருவோருக்கு எச்சரிக்கை... வாகனங்களில் நெகிழி பயன்படுத்தினால் பெர்மிட் ரத்து

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.

இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு  அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்

குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர் பாட்டில்கள், திண்பண்டங்களில் அதிகளவில் நெகிழி பயன்பாடு இருந்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் ஏற்கனவே கொடைக்கானல் நிர்வாகத்தின் சார்பில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் பயன்படுத்துவது குறிப்பாக கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, கொடைக்கானல் பகுதிகளில் சென்னை உயர்நீதி மன்றம் 5 லிட்டருக்கு குறைவான அனைத்து நெகிழி, தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பானங்கள் வைத்து இருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வரி விதிக்கப்படும் என்று கொடைக்கானல் ஒன்றியத்திலுள்ள 15 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விதிகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.

AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!

இந்த நிலையில், கொடைக்கானல் நுழைவு வாயில்  பகுதியாக உள்ள காமக்கப்பட்டி, பழனி நுழைவு வாயில் பகுதியாக உள்ள அய்யம்புளி சோதனச்சாவடி,  சித்தரேவு உள்ளிட்ட 5 பகுதிகளில் பிளாஸ்டிக் பரிசோதனை செய்வதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் நெகிழி வைத்திருக்கும் நபர்களுக்கு பசுமை வரியும் விதிக்கப்பட்டு உள்ளது, இந்நிலையில் இன்று முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், நெகிழிகள்,  5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில்கள் மலைப்பகுதியில் உபயோகப்படுத்தினாலோ வாகனங்களில் கொண்டு சென்றாலோ மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு. 86-ன் கீழ் அனுமதி சீட்டு(வாகன பெர்மிட்) ரத்து செய்திட நடவடிக்கை  எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சிதலைவர் சரவணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: சிறையில் இருந்து 6 காவலர்கள் காணொலியில் ஆஜர்!
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !
சிவகங்கை பெண்களுக்கு முக்கிய செய்தி... உங்கள் தோழிகளுக்கு இந்த செய்தி முக்கியமாக இருக்கலாம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget