Dindigul: பழனி நகராட்சிக்கு சொந்தமான இடம் தனி நபர் ஆக்கிரமிப்பு - போஸ்டரால் மக்கள் அதிர்ச்சி
பழனியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து வணிக வளாகமாக கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக பழனி நகர் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி திருவள்ளுவர் சாலையாகும். இந்த சாலை முதல் சண்முகபுரம், இலட்சுமிபுரம் வரையிலான குடியிருப்பு பகுதியில் மனைகளின் மதிப்பு மிக அதிகமாகும். இந்த இடங்களுக்கு அருகிலேயே உழவர் சந்தை, பேருந்து நிறுத்தம், மருத்துவமனைகள், ஷாப்பில் மால்கள், கோயில்கள் என அனைத்தும் இருப்பதால் இப்பகுதி மதிப்பு மிக்கதாக உள்ளது. பழனி திண்டுக்கல் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பயணியர் மாளிகையில் இருந்து திருவள்ளுவர் சாலை வரும் பகுதியில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனியார் ஒருவர் வணிகவளாகம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
Tasmac Closed: நாளை எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடல்? முழு விவரம் உள்ளே..!
இதில் பலரும் வாடகைக்கும் கடைகளை வைத்துள்ளனர். இந்நிலையில் மேற்படி இடமானது நகராட்சிக்கு சொந்தமான இடம் என்று கொங்கு மக்கள் முன்னணி நிறுவனர் ஆறுமுகம் என்பவர் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு முதலமைச்சர் தனிப்பிரிவு என பல்வேறு இடங்களில் புகார் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பழனி நகராட்சி எல்லைக்குட்பட்ட திருவள்ளுவர் சாலை (வார்டு எண்-4, பிளாக் எண்-36, நகரளவு எண்-1), பயணியர் விடுதி அருகே உழவர் சந்தை செல்லும் வழியில் சுமார் 2900 சதுரடி அளவுக்கு நகராட்சிக்கு சொந்தமான இடத்தை முகமது அன்சார் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டு சட்ட விரோதமாக அனுபவித்து வருகிறார்.
S.P. Velumani: 'அதிமுக முன்னாள் அமைச்சர்களை புதிய வழக்குகளில் கைது செய்ய திட்டம்’ - எஸ்.பி.வேலுமணி
நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததை பொதுமக்கள் புகார் கூறியும் நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகமும் அதிகாரிகளும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இந்த இடத்துக்கு நகராட்சி கட்டிட அனுமதி இல்லாத நிலையில் இது குறித்து துறை சார்ந்த விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பு கட்டிடத்தை நகராட்சி சொத்தாக கையகப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, ஆக்கிரமிப்பாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள் மீதும், ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு ஆதரவாக செயல்படும் நகராட்சி அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பழனி நகர் பகுதி முழுவதும் போஸ்டர் ஓட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு அகற்றி வரும் நிலையில் அரசு இடத்தை தனிநபர் வணிக வளாகம் கட்டி வருமானம் பெற்று வருவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்