மருமகன் இறந்த அதிர்ச்சியில் மாமியாரும் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்
மருமகன் இறந்த அதிர்ச்சியில் இருந்த மாமியாரும் மயங்கி விழுந்து உயிரிழப்பு, ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்ததால், கர்ப்பிணி பெண் உட்பட கிராமமே சோகத்தில் மூழ்கியது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொடைரோடு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் வயது(24). பாஸ்ட்புட் கடையில் மாஸ்டராக வேலை செய்துவரும் இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த நாகம்மாள்(21) என்ற பெண்ணை காதலித்து வந்தார், நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட அருண்குமார், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவி நாகம்மாளுக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடத்தினார்.
பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
பின் தாய்வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மனைவிக்கு குழந்தை பிறக்க இன்னும் ஓரிருநாட்களே உள்ளதால் கடந்த நான்கு நாட்களாக அருண்குமார் கொடைரோடு பாஸ்ட்புட் கடையில் பணிபுரிந்துவிட்டு தினமும் சிலுக்குவார்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை பார்த்து சென்று வருவார். அதேபோல நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை பார்க்க இருசக்கர வாகனத்தில் சிலுக்குவார்பட்டி சென்ற அருண் அம்மையநாயக்கனூர் பள்ளிவாசல் எதிரே தலை,கை,கால், மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த இரத்த காயத்துடன் சாலையின் இடது ஓரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்,
Jayakumar: "விட்டில் பூச்சி! அழிவை நோக்கிச் செல்கிறார் அண்ணாமலை" ஆவேசம் அடைந்த ஜெயக்குமார்
அருணின் இறப்பு விபத்தா அல்லது வேறேதும் காரணமா என்ற கோணத்தில் அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காதல் திருமணம் செய்த நிறைமாத கர்ப்பிணியான தனது மகள் ஒருவருடத்திற்குள், அதுவும் குழந்தை பிறக்க இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் கணவனை இழந்துவிட்டாளே என கடும் மன உலைச்சலிலும் சோகத்திலிருந்த சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த அருணின் மாமியார் சின்னபொன்னு வயது(46) நேற்று இறவு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்,
இளம் கர்ப்பிணி பெண்ணிற்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய காதல் திருமணம் செய்த அன்பான கணவரும் அதே நாளில் அக்கரையுள்ள தாயும் அடுத்தடுத்து உயிரிழந்ததால், குழந்தை பிறக்க ஓரிரு நாட்களே உள்ள நிறைமாத இளம் கர்ப்பிணி பெண் சரிவர உணவு அருந்தாமலும் கடும் மன உளைச்சல் மற்றும் சோகத்திற்கு உள்ளானால், அவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இச்சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.