கீழடி அகழ்வாராய்ச்சி மத்திய அரசின் நெருக்கடி, லியோனியின் பரபரப்பு பேச்சு!
திருக்குறளை மொழிபெயர்த்து பைபிளுக்கு இணையாக உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும். தமிழ்நாடு பாடநூல் தலைவர் ஐ.லியோனி பேச்சு.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பயிலும்,மாணவ மாணவிகளுக்கு ஆங்கில பாடப்பிரிவில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி ஆங்கில பாடங்களில் உள்ள ஆங்கில பாடல்களை பாடி எளிதில் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார். தற்போது நடைபெற உள்ள மாநாடு முருகன் மாநாடு அல்ல அரசியல் மாநாடு,அரசியல் முருகனை பொதுமக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், இங்கிலீஷ் டீச்சர் அசோசியேசன் மற்றும் தனியார் அமைப்பினர் சார்பாக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக, மாணவ,மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கொடைக்கானலை சுற்றியுள்ள பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன்பாக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இறுதி நாளான இன்று மாணவ,மாணவிகளுக்கு ஆங்கிலம் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக தொடக்க கல்வி இயக்குனர், கல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி பங்கேற்றார், குறிப்பாக 82 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது, பைபிளுக்கு இணையாக ஐ.நா சபை அங்கீகரித்து உள்ள 122 மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் , ஆங்கிலத்தில் மட்டும்தான் மருத்துவம், பொறியியல், கால்நடை உள்ளிட்ட பாடப்பிரிவுகளை படிக்க முடியும் என்பதை மாற்றி, தமிழில் மருத்துவம் படிக்கலாம் என்பதை தற்போதைய தமிழக அரசு கொண்டு வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார், இதில் அவர் கூறியதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் 10,000 புத்தங்கள் அடங்கிய நூலகம் மற்றும் விற்பனை நிலையம் நிறுவப்பட்டு உள்ளதாகவும்,தமிழ்நாடு பாடநூல் கழகம் பெரியார் திராவிட களஞ்சியம் என்ற நூலை வெளியிடுவதற்கு ஒரு குழு பணிகளை மேற்கொண்டு வருகிறது, திராவிட இயக்கம் துவக்கம் முதல் தற்போது வரை உள்ள நிகழ்வுகள் இடம் பெற இருப்பதாகவும், பெரியார் சிந்தனைகள் 16 மொழிகளில் மொழி பெயர்த்து இருப்பதாகவும், இன்னும் பல மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
நூற்றாண்டு கண்ட ஆளுமைகளின் நூல்கள், மா.பொ.சி தமிழ் விடுதலை போராட்டத்தில் இந்தியா விடுதலை போராட்டத்தில் தமிழர்களின் பங்கு உள்ளிட்ட நூல் வெளியிடப்பட்டுள்ளது, சிறார்களுக்கு தேன்சிட்டு, ஊஞ்சல் என்ற பத்திரிகையும், ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற பெயரில் மாத இதழ் வெளியிடப்பட்டு வருவதாகவும், கோவில், அரசு அலுவலகங்கள், உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் கூடும் இடங்களில் புத்தகநிலையம் அமைக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார், கீழடி அகழாய்வினை மத்திய அரசு புறக்கணிக்கிறது அது குறித்து உங்கள் பார்வை என்ற கேள்விக்கு கீழடி மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அனைத்து அகழாய்விழும் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் இரும்பு பயன்படுத்தியுள்ளது, இரும்பின் மூலம் ஆயுதங்கள் உற்பத்தி செய்து இருக்கின்றது, இரும்பை உருக்க ஆயிரம் டிகிரி செல்சியஸ் வேண்டும் அந்த டெக்னிக்கை பயன்படுத்தி தமிழினம் கடைப்பிடித்து இருக்கின்றது. பானை ஓடுகளில் இருக்கப்படும் எழுத்துக்களுக்கு அன்றைய கால பெண்களே காரணம் எனவும், அவர்கள் அவ்வளவு அறிவாற்றல் உடைய தமிழ் இன மக்கள், சிந்து சமவெளி நாகரீகத்திற்கும், தமிழ் நாகரீகத்திற்கும் தொடர்பு இருக்கின்றது அதை ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பண்பாட்டின் பயணம் என்ற நூலில் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்நிலையில் அனைத்து நாகரீகத்திற்கும் தமிழ் மொழி தான் ஆதாரம் என வந்துவிட கூடாது எனவும் அதே போல சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி என்பதை கொண்டுவர வேண்டும் அதற்கு கீழடி அகழ்வாய்வினை இப்போதைக்கு நிறுத்தி வைக்க வேண்டும், அதை மாற்றி எழுதி தர வேணும் என அந்த ரிப்போர்ட் கொடுத்தவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது மத்திய அரசு , இதனை தமிழ் இன மக்கள் மீது போர் தொடுப்பதாக நான் கருதுகிறேன் எனவும், உண்மை என்று மறைக்க முடியாது. பஞ்சினை போட்டு நெருப்பை மறைக்க முடியாது,
என்றைக்கும் அறிவியல் பூர்வமான உண்மைகள் வெளிவரும், தமிழர்களின் நாகரிகம் தொன்று தொட்ட உண்மை என்பதை அறிவியல் பூர்வமாக பொதுமக்களால் ஏற்று கொள்ளப்படும், மத்திய அரசு கொடுக்கும் நெருக்கடி தற்காலிகமானது, தமிழர்கள் அதனை புறகணித்து தமிழர்கள் தான் ஆதிகுடி என்பதை நிரூப்பிப்பார்கள். முருகன் மாநாடு மக்களை திசை திருப்புவதற்கு நடைபெறுகிறது, ஏற்கனவே தமிழக அரசு சார்பில் முருகன் மாநாடு நடைபெற்றது, அது ஆன்மிக மாநாடு, தற்போது நடைபெறுவது அரசியல் மாநாடு, அரசியல் முருகனை மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
முருகன் மாநாடு குறித்து அதிமுக குரல் கொடுக்காது, கொடுத்தால் கூட்டணியில் விரிசல் ஏற்படும் இது தேர்தல் வரைக்கும் மட்டும் தான், தேர்தலுக்கு பின் நாம் தமிழர்கள் ஒன்று சேர்வோம் என்று ஆரம்பிப்பார்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து ஒன்றிய அரசு பயப்படுவதாக பேட்டியளித்தார்.





















