மேலும் அறிய

Rooster fair : ”கிளி மூக்கு, கட்ட மூக்கு, கடி மூக்கு” கண்களை கவர்ந்த சேவல் கண்காட்சி..!

உலக அளவிலான கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சியில் கண்ணைக் கவரும் 300க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு 

வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் எப்போதுமே மனித வாழ்வியலில் கலந்ததாகவே உள்ளது. ஆடுகள், மாடுகள், கோழிகள், பறவைகள், பூனைகள், குதிரைகள், நாய்கள் உட்பட பல்வேறு விலங்கினங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. வீட்டின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகளைக்கொண்டு நடைபெறும் போட்டிகளாக குறிப்பாக தென் மாவட்டங்களில் நடைபெறும் சேவல் சண்டை , , ஜல்லிக்கட்டு போட்டி, மாட்டு வண்டி பந்தையம், குதிரை பந்தையம், நாய்களுக்காக நடைபெறும் அழகு போட்டி , விலங்குகளின் திறமைக்கான போட்டிகள் என நடைபெற்று வருகிறது.

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

Rooster fair : ”கிளி மூக்கு, கட்ட மூக்கு, கடி மூக்கு” கண்களை கவர்ந்த சேவல் கண்காட்சி..!

அதுமட்டுமல்லாமல் அழிந்து வரும் விலங்குகளை காப்பாற்றும் வகையில் பல்வேறு பகுதிகளில் வளர்ந்து வரும் அழிவின் விழிம்பு நிலையில் உள்ள பறவை வகைகள், விலங்கு வகைகளுக்கான பாதுகாப்பு  நடவடிக்கைகளில் பல்வேறு தரப்பினர் தீவிரமாக செயல்பட்டும் வருகின்றனர்.

அந்த வகையில் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சங்கம் சார்பில் பத்தாம் ஆண்டு உலக அளவிலான மாபெரும் கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் நெல்சன் தலைமையில் நடைபெற்றது. கண்காட்சியில் தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் கண்காட்சியில் பங்கேற்றன.

TN Assembly Session LIVE: சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 11ம் தேதி வரை நடக்கும் - சபாநாயகர் அப்பாவு

Rooster fair : ”கிளி மூக்கு, கட்ட மூக்கு, கடி மூக்கு” கண்களை கவர்ந்த சேவல் கண்காட்சி..!

கிளி மூக்கு, கட்ட மூக்கு, கடி மூக்கு, கழுகு மூக்கு, மயில் நூலா, விசிறிவால், நீள வால் போன்ற வகையில் சேர்ந்த சேவல்கள் பங்கேற்றன. சேவலில் தரம் , மூக்கு ,உடல் அமைப்பு, கொண்டை ,உடல் பருமன், உயரம், வால் நீளம், சேவலின் நடை ஆகியவற்றின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசாக 10 சேவல்களுக்கு பெரிய ஏர்கூலர்கள், இரண்டாம் பரிசாக சிறிய அளவிலான ஏர்கூலர்கள், 70 சேவல்களுக்கு பெடஸ்டல் பேன்கள்  வழங்கப்பட்டன. கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட சேவல்களை சேவல் வளர்ப்பு உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து இரண்டரை லட்சம் வரை மதிப்பிலான சேவல்கள் இடம் பிடித்திருந்தன. அனைத்திந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் செயலாளர் பிரபாத், பொருளாளர் உஸ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

Rooster fair : ”கிளி மூக்கு, கட்ட மூக்கு, கடி மூக்கு” கண்களை கவர்ந்த சேவல் கண்காட்சி..!

இந்த கண்காட்சி குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், இந்த சேவல்கள் அழகுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றது. அழிந்து வரும் இந்த வகையான சேவல்களின் வளர்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த சேவல்களுக்கு கம்பு, கேப்பை, வெள்ளை சோளம், இரும்பு சோளம் ஆகிய தானியங்கள் உணவாக வழங்கி வருகிறோம். மேலும் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி தடுப்பூசி மற்றும் மருந்துகள் சேவல்களுக்கு கொடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

ஆடுகளம் திரைப்படத்தில் நடைபெறும் சேவல் சண்டைகளை பார்த்த பின்னர் சேவல் கண்காண்ட்சிகளுக்கான மவுசும் அதிகரித்து வந்ததோடு, வீட்டில் இளைஞர்கள் காளை மாடுகளை வளர்ப்பதுபோல சேவல்களையும் வாங்கிக் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை

ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது

Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

Embed widget