முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை எட்டிய திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் நகராட்சியில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் 100 சதவீதத்தை எட்டியதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் 100 சதவீத இலக்கை அடைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா தடுப்பூசி முகாம்களும் நடத்தப்படுகின்றன. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இதுவரையில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகள் செலுத்தி வந்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 100.01 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 2 லட்சத்து 19,902 ஆகும். இதில் 18 வயதுக்கு மேல் 1 லட்சத்து 69,329 பேர் உள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் முதல் தவணை தடுப்பூசியை 1,69,432 பேர் செலுத்தி உள்ளனர்.
2-வது தவணை கொரோனா தடுப்பூசியை 1 லட்சத்து 30,888 பேர் செலுத்தியுள்ளனர். இது 77.3 சதவீதம் ஆகும். திண்டுக்கல் நகர் பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் தொழில், வேலைக்காக வருகை தருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே மாநகராட்சி பகுதியில் 100 சதவீத இலக்கையும் தாண்டி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்
பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்
100 சதவீத இலக்கை அடைந்திருந்தாலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 18 வயதுக்கு மேல் 17 லட்சத்து 30,600 பேர் உள்ளனர். இதில் 16 லட்சத்து 1,174 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 92.5 சதவீதம் ஆகும். 10 லட்சத்து 11 ஆயிரத்து 85 பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

