மேலும் அறிய
Advertisement
திண்டுக்கல் : மின் இணைப்புக்கு பெயர் மாற்ற 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் ரவிக்குமார் லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரை சேர்ந்தவர் நடராஜ். அவருடைய மகன் தங்கவேல். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடராஜ் இறந்து விட்டார். இதனால் அவரது பெயரில் உள்ள விவசாய நிலத்துக்கான மின் இணைப்பை, தனது பெயருக்கு மாற்ற தங்கவேல் முடிவு செய்தார்.
இதையடுத்து வேடசந்தூரை அடுத்த சேணன்கோட்டையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில், மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்காக தங்கவேல் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உதவி பொறியாளர் ரவிக்குமார் (37), தங்கவேலிடம் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறினார்.
பின்னர் அந்த பணத்தை உதவி பொறியாளர் ரவிக்குமாரிடம் தங்கவேல் கொடுத்தார். அவர் அந்த பணத்தை வாங்கும் போது அங்கு மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவிக்குமாரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சிக்கிய சம்பவம், வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
நிதி மேலாண்மை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion