மேலும் அறிய

தேவர் ஜெயந்தி விழா; முளைப்பாரிகளை தர்காவில் வைத்து தொழுகை செய்து கொடுத்த இஸ்லாமியர்

வேடசந்தூரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முளைப்பாரிகளை தர்காவில் வைத்து தொழுகை செய்து கொடுத்த இஸ்லாமியர்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்த அவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார். பிறப்பும், இறப்பும் ஒரே நாளில் வரும் நிலையில் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை ஆகியவை நடைபெறும். அவர் பிறந்த பசும்பொன்னில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை முக்குலத்தோர் சமுதாய மக்கள் தங்கள் குலதெய்வ கோயிலாக கருதி வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும்.

விருதுநகர் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் போட்ட ஆர்டர்!

தேவர் ஜெயந்தி விழா; முளைப்பாரிகளை தர்காவில் வைத்து தொழுகை செய்து கொடுத்த இஸ்லாமியர்

இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் பசும்பொன்னுக்கு வருகை தருவார்கள். அதன்படி, இன்று தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதனை பசும்பொன்னில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேடை அமைத்து தேவரின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த ஏற்பாடு இருந்தது.  இந்த ஏற்பாடுகளை வேடசந்தூர் முக்குலத்தோர் இளைஞர்கள் பேரவை செய்தனர். இதற்கு முன்பாக கருப்பதேவனூர், கோட்டூர், வேடசந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாரிகளை எடுத்து வேடசந்தூர் சையது அப்துல் ரஹீம் அரபு அவுலியா தர்காவிற்கு கொண்டு சென்றனர்.
 
தேவர் ஜெயந்தி விழா; முளைப்பாரிகளை தர்காவில் வைத்து தொழுகை செய்து கொடுத்த இஸ்லாமியர்

அதன்பின்னர் முளைப்பாரிகளை தர்காக்குள் வைத்து இஸ்லாமியர்கள் துவா கொடுத்த பிறகு அவர்களிடமிருந்து முளைப்பாரிகளை வாங்கிக் கொண்டு சந்தை ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணி கோவிலுக்கு கொண்டு சென்று வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் உடன் முளைப்பாரிகளை ஊர்வலமாக ஆத்துமேட்டில் உள்ள மேடைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹன்சிகா என்ற சிறுமி சிலம்பாட்டம் ஆடி அசத்தினார். மேலும் ஊர்வலத்தில் மக்கள் வேலு நாச்சியார் மற்றும் முத்துராமலிங்க தேவர் போல் வேடம் அணிந்து வந்தனர்.

TN Rain Alert: தமிழ்நாட்டிற்கு நாளை தீபாவளி இருக்கா? குறிவைத்து அடிக்கும் கனமழை - சென்னை வானிலை மையம் சொல்வது என்ன?

தேவர் ஜெயந்தி விழா; முளைப்பாரிகளை தர்காவில் வைத்து தொழுகை செய்து கொடுத்த இஸ்லாமியர்

அதில் தேவர் வேடம் அணிந்து வந்த நபருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து முத்துராமலிங்க தேவரின் திரு உருவப் படத்திற்கு 100 கிலோ எடையுள்ள மாலை அணிவிக்கப்பட்டது. இதில் திமுக அதிமுக உட்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேவரின் ஜெயந்தி விழாவிற்கு கொண்டு வந்த முளைப்பாரிகளை தர்காவில் வைத்து இஸ்லாமியர்கள் வழிபாடு செய்து கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: மிடில் கிளாஸ் பேமிலிக்கு குட் நியூஸ்; கான்கிரீட் வீடு திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன்
மிடில் கிளாஸ் பேமிலிக்கு குட் நியூஸ்; கான்கிரீட் வீடு திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Embed widget