மேலும் அறிய

திமுக பெண் மாமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல்; மிசா பாண்டியன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் !

திமுகவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தி.மு.க., பெண் மாமன்ற உறுப்பினரை சமூக ரீதியாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த புகார் எதிரொலியால் பிடிஆரின் ஆதரவாளரான முன்னாள் துணை மேயரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
 
மதுரை மாநகராட்சி மண்டலம் மூன்றில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மண்டல கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மண்டலத்துக்குட்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் இந்த நிலையில் மதுரை ஹாஜிமார் தெரு 54 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நூர்ஜஹான் கலந்து கொண்டு தனது வார்டில் உள்ள கழிவு நீர் குடிநீர் பிரச்சனை குறித்து மண்டல தலைவர் பாண்டிசெல்வியிடம் கேட்டுள்ளார். அப்போது அதிகாரிகள் முன்னிலையில் நூர்ஜஹானை மண்டல தலைவரின் கணவரும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான மிசா பாண்டியன் சமூக ரீதியாக தரக்குறைவாக பேசி  கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

திமுக பெண் மாமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல்;  மிசா பாண்டியன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் !
 
பின்னர் திமுக கவுன்சிலர் நூர்ஜஹான் மிசா பாண்டியன் மதுரை மாநகராட்சியே கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அந்த அதிகாரத்தில் தன்னை மிரட்டியதாகவும் திமுக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மிசா பாண்டியனின் மனைவி பாண்டிச்செல்வியும் நூர்ஜஹான் தவறான புகார் அளிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டை வைத்தார். இவ்வாறு மாறி மாறி குற்றச்சாட்டு வைத்த நிலையில் நூர்ஜஹானுக்கு ஆதரவாகவும் பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த மிசா பாண்டியன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ச்சியாக நோட்டிஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜனின் தீவிர ஆதரவாளரும், மத்திய மண்டலத்தலைவர் பாண்டிசெல்வியின் கணவரும் முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனை தற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக பெண் மாமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல்;  மிசா பாண்டியன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் !
 
பிடிஆரின் அமைச்சர் இலாகா மாற்றப்பட்ட நிலையில் மதுரையில் மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டது இதனையடுத்து தற்போது அவரது ஆதரவாளரான மிசா பாண்டியன் மீதும் திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.  திமுகவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar cases : ”சவுக்கு பரபரப்பு வாக்குமூலம் கையை உடைத்தது உண்மை”வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல்KPK Jayakumar Death : காங். ஜெயக்குமார் மரணம்தோட்டத்தில் கைப்பற்றிய கேன்? வலுக்கும் சந்தேகங்கள்Salem Gold Thattu Vadai Set : வாவ் என்ன ருசி என்ன ருசிதங்கத்தில் தட்டுவடை? சேலத்தில் குவியும் மக்கள்Savukku Shankar cases : ”கஞ்சா வழக்கு பொய்! ஆவணங்கள் எங்கட்ட இருக்கு” சவுக்கு வழக்கறிஞர் ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?
EXCLUSIVE: “வழக்கறிஞராவதே எனது லட்சியம்” - 10 ஆம் வகுப்பில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரத்யேக பேட்டி..!
“வழக்கறிஞராவதே எனது லட்சியம்” - 10 ஆம் வகுப்பில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரத்யேக பேட்டி..!
TN 10th Result 2024: 497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
497 மதிப்பெண்கள்... 7 பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம்... 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மயிலாடுதுறை
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
ஒரே பெயரில் அதிக மின் இணைப்பு வச்சிருக்கீங்களா? அரசின் அதிரடி முடிவு- வலுக்கும் கண்டனம்!
Embed widget