மேலும் அறிய
Advertisement
திமுக பெண் மாமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல்; மிசா பாண்டியன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் !
திமுகவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க., பெண் மாமன்ற உறுப்பினரை சமூக ரீதியாக அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த புகார் எதிரொலியால் பிடிஆரின் ஆதரவாளரான முன்னாள் துணை மேயரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி மண்டலம் மூன்றில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மண்டல கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மண்டலத்துக்குட்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் இந்த நிலையில் மதுரை ஹாஜிமார் தெரு 54 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நூர்ஜஹான் கலந்து கொண்டு தனது வார்டில் உள்ள கழிவு நீர் குடிநீர் பிரச்சனை குறித்து மண்டல தலைவர் பாண்டிசெல்வியிடம் கேட்டுள்ளார். அப்போது அதிகாரிகள் முன்னிலையில் நூர்ஜஹானை மண்டல தலைவரின் கணவரும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான மிசா பாண்டியன் சமூக ரீதியாக தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
பின்னர் திமுக கவுன்சிலர் நூர்ஜஹான் மிசா பாண்டியன் மதுரை மாநகராட்சியே கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அந்த அதிகாரத்தில் தன்னை மிரட்டியதாகவும் திமுக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மிசா பாண்டியனின் மனைவி பாண்டிச்செல்வியும் நூர்ஜஹான் தவறான புகார் அளிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டை வைத்தார். இவ்வாறு மாறி மாறி குற்றச்சாட்டு வைத்த நிலையில் நூர்ஜஹானுக்கு ஆதரவாகவும் பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த மிசா பாண்டியன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ச்சியாக நோட்டிஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜனின் தீவிர ஆதரவாளரும், மத்திய மண்டலத்தலைவர் பாண்டிசெல்வியின் கணவரும் முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியனை தற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிடிஆரின் அமைச்சர் இலாகா மாற்றப்பட்ட நிலையில் மதுரையில் மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டது இதனையடுத்து தற்போது அவரது ஆதரவாளரான மிசா பாண்டியன் மீதும் திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. திமுகவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion