Crime: ஷாக்.. நடுரோட்டில் தங்கையை சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்..! தேனியில் நடந்தது என்ன?
தேனி மாவட்டம் கூடலூர் அருகே குடும்பத்தராறில் அண்ணனே தங்கையை சரமாரியா வெட்டிக்கொன்றதால் பரபரப்பு.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி 4-வது வார்டு மெயின் தெருவை சேர்ந்தவர் விமல் (34). இவரது மனைவி செல்லப்பிரியா (32). இந்த தம்பதிக்கு சுருதி என்ற மகள் உள்ளார். விமல் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, விடுதலையான அவர் கருநாக்கமுத்தன்பட்டியில் மனைவி செல்லப்பிரியாவுடன் வசித்து வந்தார்.
Twitter CEO: ட்விட்டருக்கு புதிய சி.இ.ஓ.: யார் இந்த லிண்டா யாகாரினோ? ஓர் அலசல்..!
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்லப்பிரியா, விமலுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த விமல் செல்லப்பிரியாவை செருப்பு மற்றும் கையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விமல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் விமல் செல்லப்பிரியாவின் அண்ணன் செல்லப்பாண்டியுடன் (36) வீட்டிற்கு வந்தார்.
Elon Musk: பதவியை ராஜினாமா செய்தார் எலான் மஸ்க் - டிவிட்டருக்கு புதிய சி.இ.ஓ...!
அப்போது செல்லப்பாண்டி, செல்லப்பிரியாவிடம் ஒழுங்காக கணவருடன் வாழுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த செல்லப்பிரியா உன் வேலையை பாரு, எனக்கு நீ புத்திமதி சொல்லாதே என சத்தம் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி அரிவாளை எடுத்து வந்து வீட்டிற்குள் இருந்த செல்லப்பிரியாவின் கூந்தலை பிடித்து வெளியே இழுத்து வந்தார். பின்னர் அவரது பின்கழுத்து பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
'அரிக்கொம்பன்' காட்டுயானை தஞ்சம் - மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். இதைக்கண்டதும் செல்லப்பாண்டி, விமல் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பிச்சை பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் செல்லப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய செல்லப்பாண்டி, அவருக்கு உடந்தையாக இருந்த விமல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் தங்கையை அவரது அண்ணனே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்