மேலும் அறிய

Elon Musk: பதவியை ராஜினாமா செய்தார் எலான் மஸ்க் - டிவிட்டருக்கு புதிய சி.இ.ஓ...!

டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி ( சிஇஒ ) பதவியை ராஜினாமா செய்வதாக அதன் உரிமையாளரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ( சிஇஒ ) பதவியை ராஜினாமா செய்வதாக அதன் உரிமையாளரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க் அறிவிப்பு:

இதுதொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த பெண் 6 வாரங்களில் தனது பணியை தொடங்குவார்.  தயாரிப்பு, மென்பொருள் மற்றும் அமைப்பின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும், நிர்வாகத் தலைவர் & தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக தனது பணி மாறும் ” என தெரிவித்துள்ளார்.

சிஇஒ சர்ச்சை:

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை தனதாக்கினார் எலான் மஸ்க். அதன் பிறகு அவர் ஏற்படுத்திய பல்வேறு மாற்றங்களால், டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து மஸ்க் விலக வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தினர்.

எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பு:

விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?" என டிவிட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். மேலும், பெரும்பான்மையானவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு அதற்குத் தான் கட்டுப்படுவதாகவும் உறுதியளித்திருந்தார். இறுதியில் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் எலான் மஸ்கிற்கு எதிராகத் திரும்பியது. இதில் 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் எலான் பதவி விலக வேண்டும் என்றும் பதிலளித்திருந்தனர். இதையடுத்து உறுதியளித்ததன் படி எலான், ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.

எலான் மஸ்க் சொன்ன பதில்:

நெட்டிசன்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த மஸ்க், "தனது வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்தபிறகு மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன். அதன்பின், சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் டீம்களை மட்டும் நான் கவனித்துக் கொள்வேன்" எனப் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் தான், டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பெண் ஒருவரை நியமித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் புதுப்புது அம்சங்கள்:

இதனிடையே, டிவிட்டர் செயலியில் பல்வேறு புதுப்புது அம்சங்கள் வழங்கப்படும் அண்மையில் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.  அதன்படி, பாதுகாப்பான (என்க்ரிப்டட்) முறையில்  தனிநபர்களுக்கு குறுந்தகவல்களை  அனுப்புவது, நீளமான டிவீட்களை பதிவு செய்வது, ஒருங்கிணைக்கப்பட்ட பணப்பரிமாற்றம் போன்ற பல்வேறு அம்சங்கள் புதிய மேம்படுத்தப்பட்ட டிவிட்டர் செயலியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, வீடியோ மற்றும் ஆடியோ கால் மேற்கொள்ளும் அம்சங்களும், விரைவில் வழங்கப்பட உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget