வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 60 கிலோ கஞ்சா பறிமுதல்.. இரு பெண்கள் கைது.. மதுரையில் பரபரப்பு..
60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, ராணி மற்றும் செல்வராணி என இருவரை கைது செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இந்த கஞ்சா பதுக்கல் தொடர்பாக இரு பெண்களை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு தென்மண்டல காவல்துறை தலைமையிலான சிறப்பு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இந்த கஞ்சா பதுக்கல் தொடர்பாக இரு பெண்களை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுத்தப்படுத்தும்போது வெடித்த துப்பாக்கி; முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு - மதுரையில் சோகம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி., நல்லு தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்ணிடம் நடத்திய சோதனையில் அவர் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது., மேலும் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் கொக்குடையான்பட்டியைச் சேர்ந்த ராணி என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் ராணியின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரது வீட்டில் இருந்த சுமார் 60 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ராணி மற்றும் செல்வராணியையும் கைது செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.