மேலும் அறிய
சிவகங்கைக்கு தலைநகர் காரைக்குடியா? - வீதிக்கு வந்த போஸ்டர் சண்டை...!
’’அதிமுக எம்.எல்.ஏவுக்கு எதிராக இடதுசாரி மாணவ அமைப்புகளும் அமமுகவும் போஸ்டர்கள் ஓட்டி வரும் நிலையில், இதனை கண்டித்து அதிமுகவினரும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்’’

அதிமுக ஒட்டியுள்ள போஸ்டர்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் சிவகங்கையை தவிர மற்ற தொகுதிகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸும் வென்றன. சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவின் செந்தில் நாதன் இருந்து வருகிறார். இந்த நிலையில் பல வருடங்களாக சிவகங்கை தொகுதியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் இல்லை என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் சிவகங்கை தொகுதிக்கு கல்லூரிகள் கொண்டு வரவேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ செந்தில்நாதன் சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் சார்ந் AIYE - இளைஞர் அமைப்பும் மற்றும் AITUC - தொழிற்சங்க அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிவகங்கை பகுதி முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ள்னார்.

அதே போல் அமமுக கட்சி சிவகங்கை நகர் செயலாளர் அன்பு மணி தான் அடித்த போஸ்டரில்
தமிழக அரசை ! வண்மையாக கண்டிக்கிறோம்.. தமிழக அரசுக்கு துணை போகும் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை வண்மையாக கண்டிக்கிறோம். அரசு வேளாண் கல்லூரி காரைக்குடிக்கே... அரசு சட்டக் கல்லூரி காரைக்குடிக்கே... சிவகங்கை மாவட்ட தலைநகரும் காரைக்குடிக்கேவா ? புறக்கணிக்காதே... புறக்கணிக்காதே....
சிவகங்கை சட்டமன்ற தொகுதி மக்களை புறக்கணிக்காதே.... கொண்டு வா... கொண்டு வா... வேளாண்மைக் கல்லூரி... சட்டக்கல்லூரியை சிவகங்கைக்கு கொண்டு வா.. என தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இது குறித்து பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் AIYF நகர செயலாளர் கண்ணனிடம் இது குறித்து கேட்டோம் "நான் கடந்த ஒருவாரமாக வெளியூரில் இருந்தேன். இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. போஸ்டர் ஒட்டியது குறித்து கேட்டுவிட்டு தகவல் அளிக்கிறேன் என்றார்.

மேலும் இது குறித்து முன்னாள் எம்.பியும், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில் நாதனிடம் பேசினோம்,
சட்டப்பேரவையில் சிவகங்கை வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தேர்தல் சமயத்தில் பொதுமக்கள் கல்லூரிகள் கொண்டு வரவேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து சட்ட பேரவையில் பேசும் போது சிவகங்கை தொகுதிக்கு சட்ட கல்லூரி கொண்டு வரவேண்டும், வேளாண்மை கல்லூரி கொண்டு வரவேண்டும், அல்லது தோட்டக்கலைத்துறை அல்லது கால்நடைத்துறை கல்லூரியாவது கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். நான் பேசி ஒரு வாரத்திற்கு பின் அறிவிப்பு வந்தது. ஆனால் அதில் சிவகங்கை தொகுதிக்குள் கல்லூரி கட்ட எந்த திட்டமும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நான் குரல் எழுப்பவில்லை, துரோகம் செய்துவிட்டேன் என கம்யூனிஸ்ட் சார்ந்த அமைப்புகள் பொய்யான தகவலை பரப்பும் போஸ்டரை ஒட்டியுள்ளனர். கம்யூனிஸ்ட் அமைப்புகள் தற்போது கூட்டணி கட்சியில் உள்ளோம் என்பதால் திசை திருப்ப இவ்வாறு பொய்யை பரப்புகின்றனர். இதில் என்னை கண்டிக்க வேண்டும் என்பதில் என்ன இருக்கிறது" என்றார்.
மேலும் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா





















