மேலும் அறிய

காலை உணவுத் திட்டம் - முதல்வர் நாளை மதுரையில் தொடங்கி வைக்கிறார்

நாளை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மதுரை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக  அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒன்று ஆகும். மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இதன்படி முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம்  செயல்படுத்தபடவுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.


காலை உணவுத் திட்டம் - முதல்வர் நாளை மதுரையில் தொடங்கி வைக்கிறார்
 
இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு அரசு அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள  14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. மேலும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி,  11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி, 6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி என வழங்கப்படவுள்ளது.
 

மேலும், அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் இந்த பணியை சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும். சுத்தமான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வது அவசியம். காய்கறிகள், உணவுப் பொருட்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பார்வையிட்டு தரம், சுவையை பரிசோதிக்க வேண்டும். மாணவர்கள் தட்டு மற்றும் கைகளை தூய்மையாக கழுவுவதை கண்காணிக்க வேண்டும். காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு வழங்கும்போது உணவு பரிமாறுவதற்கு எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உதவி செய்யலாம். மேலும் சுகாதார குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறப்பான முறையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை தலைமை ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. 

காலை உணவுத் திட்டம் - முதல்வர் நாளை மதுரையில் தொடங்கி வைக்கிறார்

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா ஏதேனும் ஒன்றும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை ரவை கிச்சடியில் ஏதேனும் ஒன்றும், புதன்கிழமை ரவை அல்லது வெண் பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரியுடன் காய்கறி சாம்பாா் தினமும் வழங்கப்படவுள்ளது.

காலை உணவுத் திட்டம் - முதல்வர் நாளை மதுரையில் தொடங்கி வைக்கிறார்
நாளை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மதுரை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 1246 துவக்கபள்ளிகளில் உள்ள நிலையில் முதற்கட்டமாக 26 பள்ளிகளை சேர்ந்த 4136 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது, மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள சமையல் அறைகள் வாயிலாக உணவுகள் கொண்டு செல்லப்படவுள்ளது. முதலமைச்சரின் வருகையால் சமையல் அறை பகுதியில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Embed widget