மேலும் அறிய
Advertisement
முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
நன்மாறன் உடலுக்கு மலரஞ்சலி செலுத்திய முதல்வர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கக்கன், காமராஜரை போல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த ’நன் மாறன்’ நேற்று முன்தினம் இரவு மூச்சுத்திணறல் காரணமாக அரசு ராஜாஜி மருந்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4 மணிக்கு காலமானார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பலதரப்பினர் மறைந்த நன்மாறனுக்கு புகழ் அஞ்சலியால் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் மதுரையில் நன்மாறன் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் இன்று மாலை அஞ்சலி செலுத்தினார். நன்மாறன் உடலுக்கு மலரஞ்சலி செலுத்திய முதல்வர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
எளிமைப் பண்பாலும் அயராத உழைப்பாலும் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர்; இலக்கிய நயத்தால் ‘மேடைக் கலைவாணர்’ எனப் பெயர்பெற்ற மதுரையின் மாணிக்கம்; என் இனிய நண்பர் திரு. நன்மாறன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/ykTEuITf6X
— M.K.Stalin (@mkstalin) October 28, 2021
முதல்வருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், அன்பில்பொய்யாமொழி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் நிகழ்விற்கு கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நன்மாறன் உடல் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, தமிழ்நாடு இறையியல் கல்லூரி நிர்வாகி மார்க்கெட் கலைச்செல்வி , பார்வார்டு பிளாக் சார்பில் பி.என்.அம்மாசி, தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர ஆரோக்கிய மேரி,மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், திருச்சிராப்பள்ளி புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், தட்சிணரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் சங்கரநாராயணன்,தமிழஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன்பாப்பையா, ஜனதா தளம் சார்பில் மாநிலச் செயலாளர் செல்லப்பாண்டியன், தேசிய விடுதலை முன்னணி சார்பில் கணேசன், ஆதித்தமிழர் கட்சி சார்பில் கு.ஜக்கையன், விடுதலைச் சிறுத்தைகள் தெற்கு மாவட்டச் செயலாளர் இன்குலாப், மக்கள் கண்காணிப்பகம் சார்பில் ஹென்றிதிபேன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் நன்மாறன் அவர்கள் குறித்த செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”என்கிட்ட 20 ரூபாய்தான் இருக்கு” - மக்கள் அன்பைப்பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் காலமானார்...
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion