மேலும் அறிய

ரயில் பயணங்களில் மாற்றம்! மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி: ரயில்கள் ரத்து, வழித்தடம் மாற்றம் - முழு விவரம்!

செங்கோட்டையில் இருந்து ஈரோட்டிற்கு காலை 5.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16846) இன்று முதல் வரும் 30-ந் தேதி வரை செங்கோட்டை - திண்டுக்கல் இடையே புதன்கிழமை நீங்கலாக ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட மதுரை கோட்டத்தில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு மதியம் 2 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்16845) நேற்று (31-ந் தேதி) முதல் இம்மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமை நீங்கலாக திண்டுக்கல் - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், செங்கோட்டையில் இருந்து ஈரோட்டிற்கு காலை 5.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செப் 1ஆம் தேதி  முதல் வரும் 30-ந் தேதி வரை செங்கோட்டை - திண்டுக்கல் இடையே புதன்கிழமை நீங்கலாக ரத்து செய்யப்படுகிறது.


ரயில் பயணங்களில் மாற்றம்! மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி: ரயில்கள் ரத்து, வழித்தடம் மாற்றம் - முழு விவரம்!

மேலும், சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. அதன்படி, செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் (16848)  செப் 1முதல் வரும் 30-ந்தேதி வரை காலை 6.55 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும். இந்த ரயில் காரைக்குடி, திருச்சி, கல்லக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கூடுதலாக, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய இடங்களிலும் நிற்கும். இதேபோல், நாகர்கோவில் - மும்பை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16352) செப்டம்பர் 4, 7,11,14,18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மதுரை, திண்டுக்கல் செல்லாமல், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12666), செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். அப்போது, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும், குருவாயூர் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128) இன்று முதல் வரும் 30-ந் தேதி வரை (திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை தவிர) விருதுநகர், மானாமதுரை, திருச்சி வழியாக இயக்கப்படும். இடையில், கொடை ரோடு, மணப்பாறை, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


ரயில் பயணங்களில் மாற்றம்! மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி: ரயில்கள் ரத்து, வழித்தடம் மாற்றம் - முழு விவரம்!

கன்னியாகுமரி - ஐதராபாத் இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (07229) வரும் 5, 12,19, 26 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இடையில், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆன்மீக மற்றும் சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ரயில் மூலம் பயணம் செய்து ராமேஸ்வரம் வருகின்றனர். 

மேலும் மீனவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மதுரைக்கு எளிதாக சென்று வர தினமும் காலை, நண்பகல், மாலை என மூன்று வேளைகளிலும் ரயில் நிர்வாகம் தினசரி ரயில் இயக்கி வந்தது. தற்போது, மானாமதுரை முதல் பரமக்குடி வரை பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 8-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களை தவிர மற்ற நாட்களில் தினசரி ரயில் நிறுத்தப்படும். இதற்கு மாற்றாக மதியம் 2:40 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் அதிவிரைவு ரயிலுக்கான கட்டணமாக வசூலிக்கப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தல் செலவு கணக்கீடு: சந்தை விலையை விட பல மடங்கு அதிகம்.. கொந்தளித்த செல்லூர் ராஜு !
தேர்தல் செலவு கணக்கீடு: சந்தை விலையை விட பல மடங்கு அதிகம்.. கொந்தளித்த செல்லூர் ராஜு !
மீண்டும் 'அண்ணன் - தம்பி' நேரடி மோதல்! ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மகாராஜன், லோகிராஜனின் வியூகம் பலிக்குமா?
மீண்டும் 'அண்ணன் - தம்பி' நேரடி மோதல்! ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மகாராஜன், லோகிராஜனின் வியூகம் பலிக்குமா?
பாஜக இலக்கு தெளிவு: “திமுகவை வீட்டிற்கு அனுப்புவோம்” – எல். முருகன் உறுதி
பாஜக இலக்கு தெளிவு: “திமுகவை வீட்டிற்கு அனுப்புவோம்” – எல். முருகன் உறுதி
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: பெண் உரிமை பேசும் விஜய்யின் தவெக-வில் எத்தனை பெண்கள் போட்டி?
TVK Candidate List: பெண் உரிமை பேசும் விஜய்யின் தவெக-வில் எத்தனை பெண்கள் போட்டி?
TVK Vijay Pledge: “இருமுனை போட்டிதான்“; “மக்கள் பணத்தை தொட மாட்டோம்“; வேட்பாளர்களை உறுதிமொழி ஏற்க வைத்த விஜய்
“இருமுனை போட்டிதான்“; “மக்கள் பணத்தை தொட மாட்டோம்“; வேட்பாளர்களை உறுதிமொழி ஏற்க வைத்த விஜய்
TVK Vijay: “ஒரு எம்எல்ஏ என்பவர் எப்படி இருக்கணும் தெரியுமா.?“; விஜய் கூறிய விளக்கம்; ஆர்ப்பரித்த நிர்வாகிகள்
“ஒரு எம்எல்ஏ என்பவர் எப்படி இருக்கணும் தெரியுமா.?“; விஜய் கூறிய விளக்கம்; ஆர்ப்பரித்த நிர்வாகிகள்
TVK Candidates List: விஜய் அதிரடி - 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த தவெக - யார்? எங்கு? போட்டி
TVK Candidates List: விஜய் அதிரடி - 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த தவெக - யார்? எங்கு? போட்டி
வரப்போது Rugged கார்.. Compact SUV-யில் சந்தையை மிரட்டப்போகும் டாடா, மஹிந்திரா, ரெனால்ட்
வரப்போது Rugged கார்.. Compact SUV-யில் சந்தையை மிரட்டப்போகும் டாடா, மஹிந்திரா, ரெனால்ட்
TVK Election Manifesto: ரூ.20 லட்சம் பிணையில்லா கடன், இளைஞர்களுக்கு ரூ.4000 - தவெக விஜய் தேர்தல் வாக்குறுதிகள்
TVK Election Manifesto: ரூ.20 லட்சம் பிணையில்லா கடன், இளைஞர்களுக்கு ரூ.4000 - தவெக விஜய் தேர்தல் வாக்குறுதிகள்
AIADMK Candidates List: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி- ஸ்டாலின், உதயநிதிக்கு யார்? திரு.வி.க. நகர் சர்ப்ரைஸ்
AIADMK Candidates List: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி- ஸ்டாலின், உதயநிதிக்கு யார்? திரு.வி.க. நகர் சர்ப்ரைஸ்
Electric Car Care Tips: உங்க கிட்ட மின்சார கார் இருக்கா.? அத எப்படி முறையா பராமரிக்கறதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
உங்க கிட்ட மின்சார கார் இருக்கா.? அத எப்படி முறையா பராமரிக்கறதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
Embed widget