மேலும் அறிய

TVK Candidate List: பெண் உரிமை பேசும் விஜய்யின் தவெக-வில் எத்தனை பெண்கள் போட்டி?

TVK Women Candidate: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் தவெக சார்பில் 22 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

TVK Candidate List 2026: தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். சட்டமன்ற தேர்தலில் இவரது தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தனித்துப் போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

22 பெண் வேட்பாளர்கள்:

பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் உரிமையை தனது தேர்தல் பரப்புரையில் முதன்மையானதாக எடுத்து வைக்கும் விஜய் தனது கட்சி சார்பில் எத்தனை பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார்? என்பதை காணலாம்.

தவெக சார்பில் மொத்தம் 22 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

1. திருப்பூர் வடக்கு - சத்யபாமா

2. பல்லவி - திரு.வி.க.நகர்

3. காமாட்சி - பல்லாவரம்

4. எழில் கேத்ரின் - மதுராந்தகம்

5. தாஹிரா - ராணிப்பேட்டை

6. திலகவதி - பாப்பிரெட்டிப்பட்டி

7. சுஜாதா - கெங்கவல்லி

8. லட்சுமி - ஏற்காடு

9. கெளரி சித்ரா - தாராபுரம்

10. தமிழ் செல்வி - பவானிசாகர்

11. கமலி - அவிநாசி

12. கனிமொழி - கவுண்டம்பாளையம்

13. கலைச்செல்வி - ஆத்தூர் ( திண்டுக்கல்)

14. நாகஜோதி - வேடசந்தூர் 

15. ரேவதி - குன்னம்

16. குழந்தை ராணி நாச்சியார் - சிவகங்கை

17. ஜெகதீஸ்வரி - ராஜபாளையம்

18. சிந்தாமணி - திருமயம்

19. கீர்த்தனா - சிவகாசி
 
20. மலர்விழி ஜெயபாலா - முதுகுளத்தூர்

21. அமுதா ராணி - வாசுதேவநல்லூர்

22. கவிதா - ஜெயங்கொண்டம்

பெண் உரிமைகள், பெண்கள் பாதுகாப்பை முதன்மையானதாகவே பரப்புரையில் பேசி வரும் விஜய் தனது கட்சி சார்பில் 22 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பதற்கு அக்கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர். 

வாக்கு சேகரிப்பு:

தவெக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில்  சட்டமன்ற தேர்தலில் அதிகளவு பெண் வேட்பாளர்களை களமிறக்குவதில் நாம் தமிழர் கட்சியினரே முதன்மையாக உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 117 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் அவர் இதுபோன்று வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.

ஆளுங்கட்சியான திமுக சார்பில் 18 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் 17 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்:

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மொத்தமுள்ள வாக்காளர்களில் பெண் வாக்காளர்களே அதிகளவு உள்ளனர். பெண்களின் வாக்குகளை கவர ஒவ்வொரு கட்சியினரும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். பெண்கள் வாக்குகளை கைப்பற்றும் கட்சியினரே ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் உருவெடுத்துள்ளது.

திரைப்படங்கள் மூலமாக தனக்கென அதிகளவு பெண் ரசிகைகள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்ட விஜய்க்கு இந்த தேர்தலில் பெண்கள் வாக்குகள் அதிகளவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் விஜய் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபடுவார் என்று கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget