மேலும் அறிய

மீண்டும் 'அண்ணன் - தம்பி' நேரடி மோதல்! ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மகாராஜன், லோகிராஜனின் வியூகம் பலிக்குமா?

தேனி மாவட்டத்தின் வி.ஐ.பி தொகுதியான ஆண்டிபட்டியில், இந்தத் தேர்தலிலும் 'அண்ணன் - தம்பி' இடையிலான நேரடி மோதல் உறுதியாகியுள்ளது.

கடந்த இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என அடுத்தடுத்த இரண்டு களங்களிலும் ஆண்டிபட்டி தொகுதி ஒரு சுவாரஸ்யமான தேர்தல் களத்தை கண்டது. திமுக சார்பில் மகாராஜன் களம் இறங்க, அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அவரது தம்பி லோகிராஜன் போட்டியிட்டார். ரத்தச் சொந்தங்கள் இருவேறு துருவங்களாக மோதிக்கொண்ட இந்த 'சகோதர யுத்தத்தில்', கடந்த இரண்டு முறையும் அண்ணன் மகாராஜனே (திமுக) வெற்றி வாகை சூடி, தொகுதியைத் தன் வசப்படுத்தினார். இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக மீண்டும் லோகிராஜன் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


மீண்டும் 'அண்ணன் - தம்பி' நேரடி மோதல்! ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மகாராஜன், லோகிராஜனின் வியூகம் பலிக்குமா?

கடந்த தோல்விகளுக்குப் பதிலடி கொடுத்து, இந்த முறை தொகுதியை மீட்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினர் களப்பணியைத் தொடங்கியுள்ளனர். மறுபுறம், திமுக தரப்பில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மீண்டும் களம் காண்கிறார். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், தொகுதியில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கடந்த இரண்டு வெற்றிகள் தந்த பலம் ஆகியவை அண்ணன் மகாராஜனுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைத் தேடித்தரும் என திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். மூன்றாவது முறையாக 'அண்ணன் - தம்பி' மோதலை ஆண்டிபட்டி தொகுதி சந்திக்க உள்ளது. "மீண்டும் அண்ணன் கோட்டையைத் தக்க வைப்பாரா? அல்லது தம்பி வியூகம் பலிக்குமா?" என்று தேர்தல் முடிவில் பார்க்கலாம்.

தற்போதைய நிலவரப்படி அண்ணன் மகாராஜனின் கை ஓங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசிக்கொண்டாலும், தேர்தல் களம் நகர்வை பொறுத்து போட்டி மேலும் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு அதிமுக கோட்டையாக கருதப்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுக சார்பில் மகாராஜனும் அதிமுக சார்பில் லோகிராஜனும் முதல் முறையாக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 12 ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட மகாராஜன் வெற்றி பெற்றார்.


மீண்டும் 'அண்ணன் - தம்பி' நேரடி மோதல்! ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மகாராஜன், லோகிராஜனின் வியூகம் பலிக்குமா?

அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் சகோதரர்கள் இருவரும் மீண்டும் எதிரெதிரே போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன் 8 ஆயிரத்து 538 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார். இந்த இரண்டு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் அ.தி.மு.கவின் வெற்றியை பறிக்கும் சக்தியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 3வது முறையாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உடன் பிறந்த சகோதரர்களான மகாராஜன் மற்றும் லோகிராஜன் ஆகியோர் எதிரெதிரே களம் காண தயாராகியுள்ளனர்.

ஹாட்ரிக் வெற்றியை பெரும் முனைப்புடன் நடப்பு  திமுக எம்எல்ஏ மகாராஜனும், கடந்த இரண்டு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும், இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்துள்ளதால் தனக்கே வெற்றி என முனைப்புடன் லோகிராஜனும் தேர்தலை சந்திக்க உள்ளனர்.  தொடர்ந்து மூன்று முறை உடன் பிறந்த சகோதரர்கள் எதிரெதிர் அணியில் தொடர்ந்து போட்டியிடும் சம்பவம்  தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் பேசு பொருளாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget