மதுரை : ரத யாத்திரை தொடர்பான வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
இந்த உத்தரவுகள் எதுவும் சட்டப்படியாக இல்லை. திருசுதந்தரர்கள், ஐயர்கள், பூஜாரிகள் என சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமும் கருத்து கேட்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில் தொடர்பான தனிநீதிபதியின் உத்தரவு மற்றும் அதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு...
இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
அறநிலையத்துறை நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி திருசுதந்திரர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் பாதுகாப்பு பணிக்கு ஆயுதப்படை காவலர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இதையடுத்து திருச்செந்தூர் கோவில் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றும் வகையில் அறநிலையத்துறை அரசாணையை வெளியிட்டது. அதில், திருசுதந்திரர்களுக்கு ஓராண்டுக்கு அடையாள அட்டை வழங்குவது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருசுதந்திரர்கள் சங்கம் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு,"திருச்செந்தூர் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி 1.4.2022-ல் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் எதுவும் சட்டப்படியாக இல்லை. திருசுதந்தரர்கள், ஐயர்கள், பூஜாரிகள் என சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமும் கருத்து கேட்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு சட்ட விதிகள், மனுதாரர்களின் கருத்துக்களை மீறி பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் பல்வேறு சட்டக்கேள்விகள் எழுகின்றன. இதற்கு தீர்வு காண இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இந்த வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பதிவுத்துறை அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.திருச்செந்தூர் கோவில் தொடர்பான தனிநீதிபதியின் உத்தரவு மற்றும் அதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு...
இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறநிலையத்துறை நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி திருசுதந்திரர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் பாதுகாப்பு பணிக்கு ஆயுதப்படை காவலர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இதையடுத்து திருச்செந்தூர் கோவில் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றும் வகையில் அறநிலையத்துறை அரசாணையை வெளியிட்டது. அதில், திருசுதந்திரர்களுக்கு ஓராண்டுக்கு அடையாள அட்டை வழங்குவது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருசுதந்திரர்கள் சங்கம் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது.
தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, "திருச்செந்தூர் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி 1.4.2022-ல் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் எதுவும் சட்டப்படியாக இல்லை. திருசுதந்தரர்கள், ஐயர்கள், பூஜாரிகள் என சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமும் கருத்து கேட்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு சட்ட விதிகள், மனுதாரர்களின் கருத்துக்களை மீறி பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் பல்வேறு சட்டக்கேள்விகள் எழுகின்றன. இதற்கு தீர்வு காண இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இந்த வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பதிவுத்துறை அனுப்ப வேண்டும்"என உத்தரவிட்டுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி சேகரிக்க மதுரையில் நடந்த ரதயாத்திரையில் பங்கேற்ற அழகர்சாமி, பாண்டியன், கிருஷ்ணன், மணிமாலா, வெற்றிச்செல்வி உட்பட 52 பேர் மீது கரிமேடு போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி, பாண்டியன், கிருஷ்ணன், மணிமாலா, வெற்றிச்செல்வி உட்பட 52 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்
அதில், "கடந்த 2021 பிப்ரவரி 20ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மதுரையில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ரத யாத்திரை நடத்தி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. யாத்திரை நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முறையாக அனுமதி பெற்று இந்த ரதயாத்திரை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் காவல் துறையினருக்கு எதிராக நடந்து கொண்டதாகவும் கூறி எங்கள் மீது மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எங்கள் மீது முன்விரோதம் கொண்டு இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் அமர்வில் ரதயாத்திரையில் பங்கேற்ற 52 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.