மேலும் அறிய

‘பாஜகவினர் திரும்ப திரும்ப திமுக அரசு மீதான பொய்யை பரப்பி வருகின்றனர்’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

பாஜகவினர் திரும்ப திரும்ப திமுக அரசு மீதான பொய்யை பரப்பிவருகின்றனர், ஒற்றுமையில் வேற்றுமை காணும் கூட்டத்திற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம்புகட்ட வேண்டும் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பழனிவேல் தியாகராஜன், கீதாஜீவன், மனோ தங்கராஜ் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் செயலர்கள், உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறுபான்மை நலத்துறை சார்பில் ஏராளமான பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
 
‘பாஜகவினர் திரும்ப திரும்ப திமுக அரசு மீதான பொய்யை பரப்பி வருகின்றனர்’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மதுரையில் தமிழ்நடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியபோது, "ஜனநாயகம் பெரும்பான்மை வாதமாகிவிடக்கூடாது ஜனநாயகத்தில் பெரும்பான்மை ஆள வேண்டும். சிறுபான்மை வாழ வேண்டும், தற்போது நாட்டில் சிறுபான்மையினருக்கு நெருக்கடி, அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சிறுபான்மையினர்கள் மரியாதையோடு மாண்போடு முதல்வர் ஆளும் தமிழத்தில் மட்டுமே வாழ்கிறார்கள். இந்திய அரசு சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை நிறுத்தி இருப்பது வேதனையை அளிக்கிறது. இந்திய அரசு சிறுபான்மை மாணவர்களின் கல்வித்தொகையை நிறுத்தினாலும் கேரள அரசு மாநில அரசின் நிதியில் இருந்து கொடுக்கும் என அறிவித்ததை போல தமிழக அரசும் தங்கள் நிதியில் இருந்து அந்த கல்வித்தொகையை கொடுக்க வேண்டும்” என்றார்.

‘பாஜகவினர் திரும்ப திரும்ப திமுக அரசு மீதான பொய்யை பரப்பி வருகின்றனர்’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
 
இதனையடுத்து தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  பேசியபோது, ‘இங்கு எங்கும் மதமாற்றம் நடைபெறவில்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் சில சமூகங்களில் ஒரே குடும்பத்தில் இந்துக்களும், கிறிஸ்துவரும் இருப்பார்கள் இதனால், தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்வதற்காக மதம் மாறிப்போய் திருமணம் செய்துகொள்வார்கள் இதனை மதமாற்றம் என கூறுகின்றனர்., பணம் , பொருளை கொடுத்து மதமாற்றம் செய்தால் தான்  அது குற்றம், அரசியல் சாசன சட்டத்தின் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் சிலர் விரும்பி மதம் மாறுகின்றனர்’ என்றார்.
 
‘பாஜகவினர் திரும்ப திரும்ப திமுக அரசு மீதான பொய்யை பரப்பி வருகின்றனர்’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழாவின் இறுதியில் பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி்மஸ்தான் பேசியபோது,  ‘பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர், அம்பேத்கர் போன்றோர் கல்வி அறிவு மூலமாகதான் சமநிலை கொண்டுவர முடியும் என்று செயல்பட்டனர். ஆங்கிலயேரையும் வசப்படுத்தி சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் படிக்கும் முடியும் என சூழ்ச்சி செய்தனர் இதனையடுத்து நீதிகட்சி போன்ற பல்வேறு கட்சிகள் உருவாகியதால. தான் தற்போது அனைத்து சமூகத்தினரும் மருத்துவகல்வியை படித்துவருகின்றனர்.காமராஜர் எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை மேலும் சத்தாக வழங்கியதோடு சீருடை மற்றும் காலணியை வழங்கியதோடு விடுதிகளையும் வழங்கியவர் கலைஞர், சிறுபான்மையினர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிறுத்தியுள்ளது ஒன்ளிய அரசு, இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்துள்ளார்.

‘பாஜகவினர் திரும்ப திரும்ப திமுக அரசு மீதான பொய்யை பரப்பி வருகின்றனர்’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
 
மத்திய பாஜக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக நடத்தி மக்களை காக்கும் மாயையாக பேசிவருகின்றது, பாஜகவினர் தினந்தோறும் திரும்ப திரும்ப திமுக அரசு மீது பொய்யை பேசிவருகின்றனர், மோடியின் சாதனையை சொல்ல முடியாமல் திமுக அரசை தூற்றுவதையே வேலையாக வைத்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற போது நிதிநெருக்கடி இருந்த நிலையிலும் நிர்வாக திறனோடு அரசின் ஆடம்பர செலவை தவிர்த்து அரசின் வருவாயை கொண்டுவந்ததால் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது. தனிநபர் கடன் 40ஆயிரத்தி 348 ரூபாய் 1லட்சத்தி 43ஆயிரம் ரூபாயாக பாஜகவின் சாதனை, 1லட்சம் பேருக்கு வேலை என்று கூறினீர்கள் தற்போது வேலையின்மை தான் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை, கேஸ்விலை உயர்வு தான் உங்களது பாஜகவின் சாதனையா,  இந்திய ரூபாயின் டாலர் மதிப்பு குறைந்துள்ளது இது தான் உங்களது சாதனையா? உலகளவு வளர்ச்சியில் இந்தியா 3ஆம் இடத்தில் இருந்து 104ஆவது இடத்திற்கு கொண்டுசென்றது தான் உங்களது சாதனையா என தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு போல ஒரே நாடு ஒரே சாதி என கூற முடியுமா. வெள்ளையர் ஆட்சியில் சமஸ்கிருதம்  புகுத்தப்பட்டது போல தற்போது நீட் தேர்வை கொண்டுவந்துள்ளனர். மாநில அரசின் ஒன்றிய உரிமைகளில் தலையீடுகின்றனர். சிறுபான்மையினர் மக்களின் பாதுகாவலராக இருந்துவரும் முதலமைச்சர் எதற்கும் அஞ்சாமல் அலட்சியம் கொள்ளாமல் பயணித்துவருகிறார்., ஒற்றுமையில் வேற்றுமை காணும் கூட்டத்திற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம்புகட்ட வேண்டும்’ என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
Embed widget