மேலும் அறிய
பெண்ணை வன்கொடுமை செய்ய முயற்சி - பிரபல ரவுடி குருவி விஜயை சுட்டுப்பிடித்த போலீஸ்
’’மதுரை அண்ணாநகர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்’’

கைது செய்யப்பட்ட ரவுடி குருவி விஜய்
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை நேற்று நள்ளிரவு ரவுடி குருவி விஜய் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அந்தப்பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் போலீஸ் எண் 100-க்கு போன் செய்ததால் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். காவல்துறையினரை பார்த்ததும் குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் கார்த்திக் உள்ளிட்டோர் கட்டை மற்றும் ஆயதங்களால் காவல்துறையினரை தாக்க முயன்றனர். உடனே ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்டன் தற்காப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் குருவி விஜயை காலில் துப்பாக்கியால் சுட்டதில் அவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவனையும், அவனது கூட்டாளிகளையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

காலில் காயம் பட்ட குருவி விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும் இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கேட்டபோது, பாதிக்கப்பட்ட பெண், தனது மாமாவுக்கு உணவு வழங்கச் சென்றுள்ளார். அப்போது குற்றவாளிகள் பெண்ணின், இருசக்கர வாகனத்தை வழிமறித்து மிரட்டியுள்ளனர். பின்னர் அவரை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து சென்றோம். செண்பகத்தோட்டம் பகுதியில், சந்தேகப்படும்படியாக இரு சக்கர வாகனங்கள் நிற்பதைக் கண்டு, சந்தேகத்தின் பேரில், அருகில் இருந்த டெம்போ டிராவலரை சோதனை செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, இரவு, 11 மணியளவில், இரு குற்றவாளியை கைது செய்தோம்.

டெம்போ டிராவலர் வந்து அவர்களை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட குருவி விஜய் அவர் பயன்படுத்திய கத்தியின் கோடாரி மற்றும் பாதிக்கப்பட்டவரின் கைப்பையை காவல்துறையிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, குற்றவாளிகள் போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றனர். மேலும் கற்களை வீசி தாக்கினர். இதனால் காவல் ஆய்வாளரின் மார்பில் காயம் ஏற்பட்டது. எனவே அவர் தனது பாதுகாப்பிற்காக குருவி விஜயின் வலது கால் முழங்காலில் ஒரு ரவுண்டு சுட்டார். மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி கீழே விழுந்தார், அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion