கீழடி அகழாய்வு: அகரத்தில் கிடைத்த 9 அடுக்கு உறைகிணறு - தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி !
கீழடியின் தொடர்ச்சியான அகரம் அகழாய்வு பணிகளில் ஒன்பது அடுக்கு உறைகிணறு கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![கீழடி அகழாய்வு: அகரத்தில் கிடைத்த 9 அடுக்கு உறைகிணறு - தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி ! Archeology enthusiasts rejoice at the nine-layer frozen well found in Madurai excavations கீழடி அகழாய்வு: அகரத்தில் கிடைத்த 9 அடுக்கு உறைகிணறு - தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/02/7d1ca0361a8bbc91a21116ef6258ef631662101789238184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் 30 வரை அகழாய்வுப் பணி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, விளையாட்டு சில்லுகள் என ஏகப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றன. 8-ம் கட்ட அகழாய்வில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் முதுமக்கள் தாழிகளை தொடர்ந்து அகழாய்வு செய்யும்பட்சத்தில் முதுமக்கள் தாழி உள்ளே நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
![கீழடி அகழாய்வு: அகரத்தில் கிடைத்த 9 அடுக்கு உறைகிணறு - தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/30/f5f72735b6b095e803fbc3050a76b6da_original.jpg)
- விநாயகர் சதுர்த்தி விழாவில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி - ராஜபாளையம் அருகே சோகம்
கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 என மொத்தம் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை அகரத்தில் பானை ஓடுகள், சில்லுகள், பாசிமணி கள், உறைகிணறு போன்றவை கண்டறியப்பட்டன. இதில் ஓர் உறைகிணற்றின் கூடுதல் அடுக்குகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 9 அடுக்குகள் வெளிப்பட்டுள்ளன. அடுக்குகள் ஒவ்வொன்றும் 80 செ.மீ. விட்டம், 20 செ.மீ உயரம் கொண்டவையாக உள்ளன.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)