மேலும் அறிய

ஆந்திராவில் பைக்ரேஸ் கற்று கொண்டு மதுரையில் செயின் பறிப்பு - வழிப்பறி இளைஞர் சிக்கியது எப்படி?

’’ஜெகஜால கில்லாடியாக வலம் வந்த வைரமணி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டிவந்துள்ளது’’

மதுரை மாநகர பகுதிகளுக்கு உட்பட்ட  செல்லூர், கண்ணனேந்தல், தல்லாகுளம், மூன்றுமாவடி, திருப்பாலை, பேங்க் காலணி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற பெண்கள், முதியவர்கள், பொது மக்கள்  என அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாநகரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இரண்டு தனிப்படை சிறப்பு போலீஸை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் பதிவான கண்காணிப்பு  கேமிரா காட்சிகளின் அடிப்படையில் நகரில் இருந்த 110-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்ட போது  பைக்ரேசர்கள் அணியக்கூடிய ஹெல்மெட்டை அணிந்த இளைஞர் ஒருவர்  ஒரே நாளில் அடுத்தடுத்து 12க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாகனத்தில் செல்பவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபடும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஆந்திராவில் பைக்ரேஸ் கற்று கொண்டு மதுரையில் செயின் பறிப்பு - வழிப்பறி இளைஞர் சிக்கியது எப்படி?
 
இதனையடுத்து விசாரணையை திவிரப்படுத்திய தனிப்படையினர் கிருஷ்ணாபுரம் காலனி பகுதியை சேர்ந்த வைரமணி என்ற (25) இளைஞர் சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதிசெய்த நிலையில் அவரது செல்போன் நம்பர் மூலமாக இருப்பிடத்தை கண்டறிந்து சென்னையில் இருந்தபோது கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வைரமணி மாநகரில் 13 இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 33 லட்சம் மதிப்பிலான 90 சவரன் நகை மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இரு பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வைரமணிக்கு உதவிய அவரது நண்பன் பாலசுப்ரமணியனையும் கைது செய்தனர். 
 
மதுரையில் உள்ள பிரபல பள்ளியில் பயின்ற வைரமணி ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். திருட்டு தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஆந்திராவிற்கு சென்று அங்கு பைக் ரேஸ் பயிற்சியை கற்று கொண்டு வந்ததும் பின்னர் ஆடம்பரமான பைக்கில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் கூட மின்னல் வேகத்தில் ஓட்டும் அளவிற்கு திறமையை வளர்த்து கொண்டதும் தெரியவந்தது. நகையை பறித்த அடுத்த நொடியே கண்மூடி மறைந்து போகும் அளவிற்கு ஜெகஜால கில்லாடியாக வலம் வந்த வைரமணி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு கோடி மதிப்பில் மதுரையில் புதிய வீடு ஒன்றை கட்டிவந்துள்ளது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வைரமணி தனது வீட்டில் சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறி அதற்கேற்றாற்போல நாடகத்தை நடத்தியபடியே மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் செயின் பறிப்பு சம்பவங்களை அரங்கேற்றி வந்துள்ளதோடு ஊதியம் என்ற பெயரில் வங்கியில் பணம் செலுத்தி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ஆந்திராவில் பைக்ரேஸ் கற்று கொண்டு மதுரையில் செயின் பறிப்பு - வழிப்பறி இளைஞர் சிக்கியது எப்படி?
 
இந்நிலையில் வைரமணியை கைது செய்த போலீசார் அவர் அளித்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே மாநகரில் மேலும் 8 செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய கல்மேடு பகுதியை சேர்ந்த பழனிகுமார் மற்றும் சிவா, விஜய் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்தும் 11 லட்சம் மதிப்பிலான 30 சவரன் நகையையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மதுரை மாநகரில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 120 சவரன் நகைகள் பறிமுதல் செய்த தனிப்படை காவலர்களை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டு தெரிவித்தார். 5 கொள்ளையர்களில் பலே கில்லாடி கொள்ளையனனான வைரமணி பைக் ரேசர்கள் அணியும் ஹெல்மெட் அணிந்தபடி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவனை அடையாளம் காண்பது மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தது.

ஆந்திராவில் பைக்ரேஸ் கற்று கொண்டு மதுரையில் செயின் பறிப்பு - வழிப்பறி இளைஞர் சிக்கியது எப்படி?
 
செயின்பறிப்பு கொள்ளையர்கள் கைது குறித்து செய்தியாளர்களை சந்தி்த்து பேசிய மாநகர காவல்துறை துணை ஆணையர் ராஜசேகரன், தனிப்படை காவலர்கள் தீவிர முயற்சியால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டுள்ளது. செயின் பறிப்பில் ஈடுபடுவதற்காகவே ஆந்திராவில் சென்று பைக் ரேஸ் பயிற்சி மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. இதில் கண்காணிப்பு கேமிராக்கள் தான் முக்கிய ஆவணமாக இருந்தது என்பதால் பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் நிறுவனங்களில் தரமான கண்காணிப்பு கேமிராக்களை அமைத்து பொது மக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனருடன் தொடர்பு இருப்பது போன்ற வெளியான சிசிடிவி காட்சி குறித்த விசாரணையில் கொள்ளையனுக்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுனருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget