premium-spot

மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தின் 188 தூண்களிலும், கலை வெளிப்பாடுகள் இடம்பெறும் - எம்.பி சு.வெங்கடேசன்

பாலத்தின் தூண்களில் தமிழ்நாடு மற்றும் மதுரையின் பண்பாட்டு பெருமையை விளக்கும் கலைப்படைப்புகள் 188 தூண்களில் இடம்பெற உள்ளதாக தெரிவித்தார் மதுரை எம்.பி

Advertisement
மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தின் 188 தூண்களிலும் தமிழ்நாடு- மதுரையின் கலை வெளிப்பாடுகள் இடம்பெற உள்ளது என மதுரையில் பாலப்பணிகளை ஆய்வு செய்த எம்.பி., சு.வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி..
 
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் மதுரை தல்லாகுளம் பகுதியில் இருந்து நத்தம் வரை 35 கிலோமீட்டருக்கு 1,028 கோடி ரூபாயில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதற்காக மதுரை பாண்டியன் ஓட்டலில் இருந்து ஊமச்சிகுளம் இடையேயான 7.3 கிமீ தூரத்திற்கு பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.  பறக்கும் பாலப்பணி 2018 நவம்பரில் துவங்கிய நிலையில், 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய இப்பணி கொரானா காரணமாக 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  மொத்தம் பறக்கும் பாலத்திற்காக192 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த தூண்களை அழகு படுத்தும் விதமாக மதுரையின் அடையாளமாக திகழும் மதுரை மீனாட்சியம்மன், வைகை ஆற்றில் தங்கக்குதிரையோடு எழுந்தருளும் அழகர் போன்வற்றின் சிலைகள் அமைக்கப்பட்டு வருவதோடு, ஜல்லிக்கட்டு, திருவள்ளுவர் ஒவியங்களும் வரையப்பட்டு வருகின்றன. தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்கும் விதமாக இத்தகைய பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தின் 188 தூண்களிலும்,  கலை வெளிப்பாடுகள் இடம்பெறும் - எம்.பி சு.வெங்கடேசன் 
 
இந்த நிலையில் மதுரை கலைஞர் நூலகப்பகுதியில் இருந்து செட்டிகுளம் வரையிலான 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 188 தூண்களில் நடைபெற உள்ள கலை வேலைப்பாடுகள் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொண்டார்.
 
பாலத்தின் அனைத்து தூண்களின் நாற்புறத்திலும் தமிழ்நாடு மற்றும் மதுரையின் பெருமை விளக்கும் கலைநயமிக்க சிலைகள் மற்றும் ஒவியங்கள் அமைக்கப்பட உள்ளது குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் மதுரையின் பண்பாட்டு கலைப்படைப்புகள் இடம்பெற வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
 

மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தின் 188 தூண்களிலும்,  கலை வெளிப்பாடுகள் இடம்பெறும் - எம்.பி சு.வெங்கடேசன்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதுரை-நத்தம் பறக்கும் பால பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் மத்திய அமைச்சர்கள் பாலத்தை திறந்து வைக்க உள்ளனர். பாலத்தின் தூண்களில் தமிழ்நாடு மற்றும் மதுரையின் பண்பாட்டு பெருமையை விளக்கும் கலைப்படைப்புகள் 188 தூண்களில் இடம்பெற உள்ளது” என தெரிவித்தார்.
 
 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

Continues below advertisement

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
Continues below advertisement

முக்கிய செய்திகள்

மேலும் காண
Hello Guest

பர்சனல் கார்னர்

Formats
Top Articles
My Account
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Embed widget
Game masti - Box office ke Baazigar