'காவேரி உரிமைக் காப்பாற்றுவதற்காக அதிமுக களத்தில் நின்று மக்களோடு மக்களாக தொடர்ந்து போராடும்' - ஆர்.பி.உதயகுமார்
ஒடிஷா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மௌன அஞ்சலி செலுத்தினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரையூர் அரண்மனை வீதியில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, கழக அம்மா பேரவையின் சார்பில் கழக அம்மா பேரைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது," நாட்டையே அதிர்ச்சி கொள்ளும் வகையில், ஒடிசாவில் உள்ள பாலசோர் மாவட்டம் அருகே, சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விலைமதிக்கமுடியாத உயிர்கள் பலியாகி உள்ளன. இதில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். இது குறித்து கழக பொது செயளாலர் எடப்பாடியார் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, காயம் அடைந்தவர்கள் பூரண நலம் பெற்றும், தமிழகத்தைச் சேர்ந்த உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கியும், காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கியும்,தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி அரசு மேற்கொள்ள வேண்டும். ஸ்டாலின் வருவார் ,விடியல் தருவார் என்று கூறினார்கள் ஒரு விடியலும் ஏற்படவில்லை. எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள்,கள்ளச்சாராய குடித்துவிட்டு மரக்காணத்தில் மடிகின்றனர்.செங்கல்பட்டு, தஞ்சாவூரில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர் டாஸ்மாக்கில் குடித்தவர்கள் எத்தனை லட்சம் பேர் இறந்திருக்கின்றார்கள் என்று புள்ளிவிவரம் மறைக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவமனைக்கு சென்று போனால் மருந்தில்லை சிகிச்சை அளிப்பதற்கு டாக்டர்கள் இல்லை. பேரையூரில் கூட அரசு மருத்துவர்கள் இல்லை நாங்களும் அரசிடம் கோரிக்கையை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மருத்துவர்கள் இல்லை என்ற நிலைமை உள்ளது?அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? குடிசை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போகிறார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழ்நாட்டில் சீர் செய்ய வேண்டியதை சீர் செய்யாமல், சிங்கப்பூர்,ஜப்பான் நாட்டிற்கு சென்று புல்லட் ரயிலில் போனார் ஸ்டாலின்.
இங்குள்ள பேருந்தில் பஸ் கூரை பிஞ்சு போய் இருக்குது ,பேருந்தில் டயர் கலந்து ஓடிக்கொண்டிருக்கிறது. மேகதாது பிரச்சனையில் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தொடர் குரல் கொடுத்து மேகதாதுவில் அணை கட்டாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. காவேரி உரிமைக் காப்பாற்றுவதற்காக அதிமுக களத்தில் நின்று மக்களோடு மக்களாக தொடர்ந்து போராடும்” என கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராமசாமி, மகாலிங்கம், அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன் ,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்