மேலும் அறிய
எக்ஸ்பிரி டேட் ஆன மாத்திரை போல டிடிவி தினகரன்! ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்
முதலில் மக்கள் பணியை செய்ய சொல்லுங்கள் அதற்கு பிறகு மக்கள் தலைவர்களை பற்றி பேச சொல்லுங்கள் டி.டி.வி.தினகரன் குறித்து காட்டமான பதில்.

ஆர்.பி.உதயகுமார் - மதுரை
Source : whatsapp
எக்ஸ்பிரி டேட் முடிந்தவரை பற்றி பேசத் தேவையில்லை - காலாவதி ஆவதற்கு முன்பு சாப்பிட்டால் குணமாகும், பின்பு சாப்பிட்டால் விஷமாகும். டிடிவி தினகரன் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம்.
திருமங்கலம் பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் மனு
மதுரை 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரவீன் குமாரிடம் மனு அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் சந்தித்த ஆர்.பி உதயகுமார் கூறுகையில்...,” மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி வறட்சியில் உள்ளது. 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும். திருமங்கலம் பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்தவர் அவரை தவெக ஏற்றுக்கொள்ளாது என டிடிவி தினகரன் விமர்சனத்திற்கு?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லிவிட்டார். டி.டி.வி., தினகரனை பற்றி பேசத் தேவையில்லை. மீடியா வெளிச்சம் இல்லை என்றால், தமிழக மக்கள் மறந்து விடுவார்கள். டி.டி.வி., தினகரன், அவர் முதலில் மக்கள் பணி செய்யட்டும். டெல்டா மாவட்டங்களில் நெல் விதைகள் வீணாகப் போகிறது. அதைப் பற்றி எல்லாம் பேசாமல், போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது. முதலில் மக்கள் பணியை செய்ய சொல்லுங்கள். அதற்கு பிறகு மக்கள் தலைவர்களை பற்றி பேச சொல்லுங்கள்.
மாத்திரை எக்ஸ்பிரி டேட் ஆன தினகரன்
மாத்திரை எக்ஸ்பிரி டேட் முடிவதற்கு முன்பு சாப்பிட்டால் குணமாகும். அதையே காலம் தாழ்ந்து பின்பு சாப்பிட்டால் விஷம் ஆகிவிடும். எனவே எக்ஸ்பிரி டேட் முடிந்தவரைப் பற்றி பேச தேவையில்லை.
டெல்டா மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழுகாது
டெல்டா மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழுகாது. அந்த அளவிற்கு விவசாயிகள் கோபத்தில் உள்ளனர். எல்லா நெல்லும் நாத்தாக மாறிவிட்டது. இதனை மறைத்து மாற்றும் முயற்சியில் உதயநிதி செயல்படுகிறார்” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















