மேலும் அறிய

ஆதிதிராவிடர் மாணவர் நிதி மோசடி செய்பவர்கள் தெருவில் 'பிச்சை எடுக்கலாம்' - நீதிபதிகள் கடும் காட்டம்!

கோபமடைந்த நீதிபதிகள் எப்பொழுது ஊழல் செய்ததற்கு எப்ப குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர்.

ஊழல் செய்த அதிகாரிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற நினைக்கலாமா நீதிபதிகள் கேள்வி? தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளில் ஊழல் செய்த அதிகாரிகள் எத்தனை பேர்?

ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மோசடி

சிவகங்கை மாவட்டம் பாத்திரக்குடியைச் சேர்ந்த சக்திவேல் தாக்கல் செய்த மனு...," சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி 35 லட்சம் நிதியில் பெரும் மோசடி நடந்துள்ளது. 2017 முதல் 2023 வரை அரசு ஒதுக்கிய தொகை மாணவர்களின் கணக்கில் செலுத்தப்படாமல், இதன் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதில் ஈடுபட்டதாக கூறப்படும் தாசில்தார்களில் பலர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒரு சிலர் பணி ஓய்வு பெற மாவட்ட ஆட்சியர்கள் அனுமதித்து உள்ளனர். இது சட்டவிரோதம், ஆதி திராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. எனவே அரசின் நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு  தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர்  அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்பொழுது கோபமடைந்த நீதிபதிகள் எப்பொழுது ஊழல் செய்ததற்கு எப்ப குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பணத்தில் ஊழல் செய்வதற்கு பிச்சை எடுக்கலாம் இந்த பொழப்பு அதிகாரிகளுக்கு தேவையா ? அரசு பணத்தில் மாணவனுக்கு கொடுக்கும் உதவி திட்டத்தில் ஊழல் செய்வதற்கு பதில் தெரு தெருவாக  பிச்சை எடுக்கலாம் இது போன்ற நாய்களை ஏன் வைத்துள்ளார்கள். உழல் செய்தவனுக்கு மக்கள் வரி பணத்தில்  அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி ஆதரவாக பேசுகிறீர்கள். இது போன்ற ஆட்களை வைத்து தான் அரசு நடத்தபட்டு வருகிறது. என்ன கடும் கோபமாக பேசிய நீதிபதிகள் நீதிபதி இது போன்று வார்த்தைகளை பேசினார் என சொல்லிக் கொள்ளுங்கள் என்றார்.

நீதிபதி கடும் கேள்வி

அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாங்கள் 3 மாத குழந்தை கொஞ்சம் பொருத்திருந்து பாருங்கள் என்றனர். அப்பொழுது நீதிபதிகள் ஆட்சி மாறலாம்  ஆனால் அரசு அதிகாரிகள் அப்படியதானே இருக்கிறார்கள்.99% அதிகாரிகள் ஊழல் செய்யக் கூடியவர்களாகவே தான் இருக்கிறார்கள். இங்கே நாங்கள் எந்த அரசையும் பிள்ளை அடல் வரக்கூடிய அரசுகள் ஊழல் அதிகாரிகளை தான் பாதுகாக்க முயற்சிக்கிறது என்றார்கள் மேலும். படித்து முடித்தவுடன் இந்த துறைதான் வேண்டும் என்று வருபவனை என்ன செய்ய முடியும் அவன் பணம் கொடுத்து வந்தால் ஊழல் செய்ய தான் செய்வான். என கருத்துக்களை தெரிவித்த நீதிபதிகள்.

தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளில் ஊழல் செய்த அதிகாரிகள் எத்தனை பேர்?

அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.?

எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வழக்கின் நிலை என்ன

எத்தனை வழக்கு மீது விசாரனை அதிகாரிகள் நியமனம் செய்ய பட்டுள்ளது.

என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மடப்புரம் அஜித் குமார் கொலை: டிஎஸ்பி, ஆய்வாளர் மனு தள்ளுபடி; சிறைவாசம் தொடரும்!
மடப்புரம் அஜித் குமார் கொலை: டிஎஸ்பி, ஆய்வாளர் மனு தள்ளுபடி; சிறைவாசம் தொடரும்!
தீபாவளிப் பட்டாசு: கண் காயங்கள் மறைந்த ஆபத்து, விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்!
தீபாவளிப் பட்டாசு: கண் காயங்கள் மறைந்த ஆபத்து, விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்!
நியூமெரோஸ் 'வைப் மூவர்ஸ்': இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளைக் கொண்டாடும் புதிய முயற்சி!
நியூமெரோஸ் 'வைப் மூவர்ஸ்': இந்தியப் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளைக் கொண்டாடும் புதிய முயற்சி!
மதுரை மீனாட்சி கோயில் காவலர் புகை: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம், ஆணையாளர் ஆஜராக உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் காவலர் புகை: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம், ஆணையாளர் ஆஜராக உத்தரவு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Embed widget