மேலும் அறிய

ஆதார் சேவை மையங்களில் மக்கள் கூட்டம்: தென் மாவட்டங்களில் கூடுதல் ஆதார் மையங்கள் அமைக்கப்படுமா?

காலை 5 மணி முதல்  ஆதார் மையத்தின் முன்பாக காத்துக்கிடக்கும் பொதுமக்கள் - மாவட்ட அளவில் உள்ள ஆதார் சேவை மையங்களை மேம்படுத்த கோரிக்கை.

மதுரையிலுள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்.

ஆதார் மையம்
 
தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மாநகர் கே.கே நகர் பகுதியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆதார் சேவை மையம் செயல்பட்டுவருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் ஆதார் பிரச்னை தொடர்பாக ஆதார் பெயர் திருத்தம் மற்றும் அப்டேட் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளுக்கான தேர்வு தொடங்க உள்ள நிலையில் ஹால்டிக்கெட்டுக்களுக்கான ஆவண பணிகள் தொடங்கியுள்ளதால் மாணவ மாணவிகளுக்கான ஆதாரில் திருத்தம் மற்றும் பெயர் முகவரி திருத்தம் உள்ளிட்டவைகள் செய்வதற்கு தென்மாவட்டங்களில் போதிய அளவிற்கான ஆதார் மையம் இல்லாத நிலையில் மதுரைக்கு வருகை தருகின்றனர்.
 
அதிகாலை முதல் காத்திருக்கும் மக்கள்
 
மதுரையில் மட்டுமே மத்திய அரசின் கீழுள்ள ஆதார் மையம் உள்ளது இதன் காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது ஆதார் சேவைகளை பெறுவதற்காக மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஆதார் மையத்தில் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை நாளிலும் ஆதார் மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலாகவே ஆதார் சேவை மையத்தில் காலை 5 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்
 
ஒவ்வொரு பகுதிகளிலும் சிறிய அளவிற்கான மத்திய அரசின் ஆதார் சேவை மையம் வேண்டும்
 
இது குறித்து பேசிய பொதுமக்கள் தங்கள் ஊர்களில் ஆதார் சேவை மையம் இல்லாத நிலையில் இது போன்று மதுரைக்கு சென்றால் மட்டும் தான் சரி செய்ய முடியும் என கூறுகிறார்கள். அதனால் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் எழுந்து ஆதார் மையத்திற்கு வந்திருக்கிறோம் . 9.30 மணிக்கு ஆதார் மையம் திறப்பார்கள் ஆனால் வேறு வழியில்லாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் திருத்த சேவைகளை ஈடுபட வேண்டியது உள்ளது என தெரிவித்தனர். மதுரையில் வைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையம் போல தென் மாவட்டங்களில் ஒவ்வொரு, பகுதிகளிலும் சிறிய அளவிற்கான மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தை திறக்க வேண்டும்” என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
 
கூட்டத்தால் ஏற்படும் பிரச்னை
 
மேலும் மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் எதிரில் இருக்கக்கூடிய ஆதார் மையத்தில் நாளொன்றுக்கு நூறு பேர் அமரும் அளவிற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தரக்கூடிய சூழலில், அதே பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்குள்ள கடைகளில் முன்பாக வரிசையில் காத்திருப்பதால் கடைக்கு வரக்கூடியவர்களுக்கும், ஆதார் சேவை மையத்திற்காக காத்திருக்க கூடியவர்களுக்கும் இடையே அவ்வப்போது சிறிய சிறிய பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
 

தலைப்பு செய்திகள்

Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget