மேலும் அறிய
Advertisement
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ஒத்திகை
கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து உலக நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், மாநில அரசு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியிருந்தார். அதே போல் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையமானது உருவாக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது.
இதில் நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்பொழுது அவர்களை வரவேற்பது நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது நோயாளிகளுக்கு போன்ற ஒத்திகை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் படுக்கைகள் ஆக்சிஜன் முழுக்கவசம் உள்ளிட்டவைகள் இருப்புகள் குறித்தும் மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர் மேலும் சிகிச்சை மையத்தில் உள்ள ஆக்சிஜன் வெண்டிலேட்டர் இயந்திரம், ஆக்சிஜன் சிலிண்டருன் கூடிய ஸ்டெரெச்சர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு என்பது ஜீரோ என்ற நிலையிலே இருப்பதாகவும், கொரோனவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.
இதைப் பிடிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சீனாவில் இருந்து மதுரைக்கு வந்தவர்களுக்கு கொரோனா.. பாதிக்கப்பட்ட தாய், மகள் நிலைமை என்ன?
மேலும் செய்திகள் - மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; இளம்பெண் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்..! மதுரையில் பரபரப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion