மேலும் அறிய
Advertisement
மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; இளம்பெண் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்..! மதுரையில் பரபரப்பு
மதிச்சியம் காவல்நிலையத்தின் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை மதிச்சியம் பகுதியில் மதுரை மாநகர் வைகை வடகரை ஆழ்வார்புரம், மதிச்சயம் பகுதியில் திவ்யா (28) என்ற இளம்பெண் தனது கணவர் மாரிமுத்துவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சில இளைஞர்கள் திவ்யாவின் வீட்டின் அருகே அவ்வப்போது மது அருந்தி ஆபாசமான வார்த்தைகளை பேசுவதோடு, பாட்டில்களையும் உடைத்து சென்றுள்ளனர். இதனை பார்த்த திவ்யா வீட்டின் அருகே மது குடிக்க கூடாது என எச்சரித்துள்ளார் அதனையும் மீறி அடுத்தடுத்த நாட்களில் மது அருந்திய இளைஞர்கள் வீட்டு வாசலிலயே பாட்டில்களை உடைத்துசென்றுள்ளனர்.
இதனையடுத்து திவ்யா இளைஞர்களின் மது அருந்துவது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இன்று அதிகாலை திவ்யாவின் வீட்டில் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பிவந்து பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர். இதில் வீட்டு வாசலில் இருந்த துணிகள் தீயில் எறிந்த நிலையில் பற்றி அடித்து இளம்பெண் திவ்யா அங்கும் இங்கும் ஓடி வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதிச்சியம் காவல்துறையினர் திவ்யாவின் புகாரின் கீழ் பெட்ரோல் குண்டுவீச்சில் ஈடுபட்டதாக மதுரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(19) சோனைமுத்து(19) ஆகிய இருவரையும் கைது செய்தனர் மேலும் சிலரை தேடிவருகின்றனர். மதுரை மதிச்சியம் காவல்நிலையத்தின் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீ தூள் தயாரிப்பு - 2 பேர் கைது; 400 கிலோ டீ தூள் பறிமுதல்
மேலும் செய்திகள் படிக்க - மு.க அழகிரியை சந்தித்து சால்வை அணிவித்த நிதி அமைச்சரின் ஆதரவாளரால் பரபரப்பு - திமுகவில் மீண்டும் முக அழகிரியின் கை ஓங்குகிறதா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion