மேலும் அறிய
Advertisement
மதுரையில் தேவர்சிலைக்கு பாலாபிஷேகம் செய்த பெண்கள் - கோரிப்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்துவந்து பாலாபிஷேகம் செய்துவருகின்றனர்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்து வருகின்றனர். தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவர் ஜெயந்தி
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 13 கிலோ தங்கக் கவசம், மதுரை அண்ணாநகர் பகுதியில் இருக்கக்கூடிய பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ளது.
#Madurai | தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்துவந்து பாலாபிஷேகம் செய்துவருகின்றனர்- ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.#தேவர்_ஜெயந்தி | @abpnadu | @arunavijay1970 @Thevarmagan_27 | @abplive pic.twitter.com/HGQX4kLNdC
— arunchinna (@arunreporter92) October 29, 2023
அதிமுக பொறுப்பாளராக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நினைவிட பொறுப்பாளர் காந்தி மின்னல், வங்கி மேலாளர்கள் ஆகியோர் கையொப்பமிட்ட பிறகு, முத்துராமலிங்கத் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு வாகனம் பசும்பொன்னுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம்
இந்நிலையில் நாளை 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலை அருகே மக்களுக்கான தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.
பாலாபிஷேகம் செய்து வழிபாடு
இந்நிலையில் பசும்பொன் முத்து முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி மற்றும் 61 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள முழு உருவ சிலைக்கு மதுரை மாநகரில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர். முன்னதாக தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பெண்கள் 57 நாட்கள் விரதமிருந்த பின்னர் பால்குடம் எடுத்து வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு
தொடர்ச்சியாக பல்வேறு பகுதியிலிருந்து வருகை தரும் ஏராளமான பெண்கள், பொதுமக்கள், இளைஞர்கள் ஏராளமான தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையும் பகுதி முழுவதுமாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பணிகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு செய்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Rain Alert: வரும் 29 மற்றும் 30ம் தேதியில் கொட்டப்போகும் கனமழை - எந்தெந்த பகுதிகளில்? மழை நிலவரம் இதோ!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion