மேலும் அறிய

Theni: மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தீ வைத்த இருவர் கைது - கடும் எச்சரிக்கை விடுத்த வனத்துறை

வனப்பகுதியை ஒட்டி உள்ள விலை நிலங்களில் விவசாய கழிவுகளுக்கு தீ வைக்கும் பொழுது வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து வன பாதுகாவலர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தல்.

வனப்பகுதியை ஒட்டி உள்ள விலை நிலங்களில் விவசாய கழிவுகளுக்கு தீ வைக்கும் பொழுது வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து  வன பாதுகாவலர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தல் அளித்துள்ளது.

Theni: மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தீ வைத்த இருவர் கைது - கடும் எச்சரிக்கை விடுத்த வனத்துறை

வனப்பகுதியில் தீ:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள முருகமலை வனப்பகுதியில்,  பாம்பார் காப்புக்காடு, தொண்டகத்தி  உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வந்தது. இதனைத் தொடர்ந்து  தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் மற்றும் மலை கிராம இளைஞர்கள் என 25க்கும் மேற்பட்டோர் 2 நாட்களாக போராடி  வனப்பகுதியில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தி முற்றிலும் அனைத்தனர்.

Theni: மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தீ வைத்த இருவர் கைது - கடும் எச்சரிக்கை விடுத்த வனத்துறை

வனப்பகுதியில் தீ வைத்தவர்கள் கைது:

இந்த நிலையில் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் வனப்பகுதியில் காட்டு தீ பற்றியதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், பெரியகுளம் அருகே உள்ள எ.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த  சின்னத்தம்பி, முத்துச்சாமி ஆகிய இருவரும் தொண்டகத்தி பகுதியில் பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில் விவசாய கழிவுகளுக்கு தீ வைத்த போது அருகே இருந்த வனப்பகுதியில் தீ பற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது.

Theni: மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தீ வைத்த இருவர் கைது - கடும் எச்சரிக்கை விடுத்த வனத்துறை

வனத்துறையினர் அறிவுறுத்தல்:

இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினரால் விவசாயிகள் இருவர் மீதும் 1882 ஆம் வருட தமிழ்நாடு வனச் சட்டம் 5/21கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய கழிவு பொருட்களை, தீ வைக்க முற்படும் பொழுது வனத்துறையினருக்கு உரிய தகவல் கொடுத்து  வனத்துறை ஊழியர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டுமென தொடர்ந்து  அறிவுறுத்தி வருகின்றனர்.

Theni: மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தீ வைத்த இருவர் கைது - கடும் எச்சரிக்கை விடுத்த வனத்துறை

வனத்துறையினரின் எச்சரிக்கை:

இந்நிலையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் சமூகவிரோதிகள் தீ வைத்து விட்டு தப்பிச் செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது பெரியகுளம் தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தீ வைத்த நபர்களை இதோடு இரண்டு முறை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வனப்பகுதியில் தீ வைக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் வலியுறுத்தி வருகிறார்.

தலைப்பு செய்திகள்

த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget