மேலும் அறிய
Advertisement
இலங்கை சிறையில் இருந்த 23 மீனவர்கள் விடுதலை - படகுகளை அரசுடமையாக்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி
’’மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து படகுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை’’
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 23 நாகை மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை இலங்கை நீதிமன்றம் உத்தரவு: வாழ்வாதாரமான படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை.
நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த கடந்த செப்டம்பர் 11ஆம் தேதியன்று நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவனேசன் மற்றும் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டை சாமந்தான் பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 13ஆம் தேதி அன்று இரவு 8 மணி அளவில் கடல் காற்று கடல் சீற்றம் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் கோடியக்கரை தென்கிழக்கே கடலில் வலை விரித்து மீனுக்காக காத்திருந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படை சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் படகில் இருந்த 23 மீனவர்களை கைது செய்தனர். இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து கைது செய்ததாக இலங்கை கடற்படையினர் தகவல் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். பின்னர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை சிறையில் அடைத்தனர். நாகை மீனவர்கள் 23 பேரின் நீட்டிக்கப்பட்ட காவல் முடிவடைந்ததையடுத்து மூன்றாவது முறையாக இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மீனவர்கள் மீதான வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி கிஷாந்தன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டதுடன் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 1000 அபராதம் விதித்திருக்கிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை அரசுடமையாக்கும் படி தீர்ப்பளித்தார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஓரிரு நாட்களில் தாயகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தங்களது வாழ்வாதாரமான விசைப்படகுகளை அரசுடைமையாக்கியது அதிர்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் மீனவர்களின் உறவினர்கள் படகு கட்டுவதற்காக வங்கி கடன் மற்றும் எங்களுடைய குடும்பத்தினர் அனைவரின் நகை மேலும் வட்டிக்கு கடன் பெற்று படகை கட்டினோம். ஆனால் இதுவரை கடனை அடைக்க முடியாமல் வட்டி மட்டுமே கட்டி வரும் நிலையில் படகு இல்லாமல் வருமானம் ஈட்ட முடியாத கடனை எப்படி கட்ட முடியும் வாழ்க்கை நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து படகுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion