மேலும் அறிய
Advertisement
மதுரை : பழமையான சிவன் கோயில் ரகசிய பாதாள அறையில் 21 அரிய பொருட்கள் கண்டெடுப்பு..
13-ஆம் நூற்றாண்டு பழமையான அகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள பாதாள ரகசிய அறை திறக்கப்பட்டது. இதில் பழங்கால சிலைகள் உள்ளிட்ட 21 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த திருச்சுனை கிராமத்தில் அகஸ்தீஸ்வரர் கோயிலானது 13-ஆம் நூற்றாண்டு காலத்தில் மாறவர்ம சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்தாக நம்பப்படுகிறது. அகத்தியர் இந்த கிராமத்தில் உள்ள குன்றில் சுனை உருவாக்கி வழிபட்ட போது சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சியளித்ததால், இந்த திருத்தலம் திருமணத்திற்கு விசேஷமாக விளங்குகிறது. இதனால் திருச்சுனை கிராமம் என அழைக்கப்படுகிறது.
இப்பகுதியை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் மற்றும் திருமண வைபவங்கள் நடைபெற்று வருகின்றன. திருமண தடை நீங்கும் சிறப்பு தலம் என்பது குறிப்பிட தக்கது. இந்நிலையில் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் பழமையான கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்ட நிலையில் மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மதுரை திருச்சுனை அகத்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை தொடங்கினர்.
அப்போது கோயிலை ஆய்வு செய்தபோது கோயிலில் பல ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த நிலையில் விழாக்காலங்களில் வீதி உலா நடைபெறக்கூடிய உற்சவர்கள் சிலைகள் இல்லாதது தெரியவந்தது. இந்நிலையில் அகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் அருகே பல நூற்றாண்டு காலமாக ரகசிய பாதாள அறை ஒன்று இருப்பதாக தெரியவந்தது.
இதனையடுத்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன் முன்னிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ரகசிய அறையை பூட்டை உடைத்து திறந்தனர்.இதனையடுத்து ரகசிய அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு பழமைவாய்ந்த மூசிக வாகன விநாயகர் மற்றும் ஸ்ரீசண்டிகேஸ்வரர், அம்மன், சிலைகளும் அஸ்வ வாகன சூலாயுதம் உள்ளிட்ட சிலைகளும், விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்கள் என 21 பழமையான பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஆவணப்படுத்திய பின்னர் மதுரை அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன் நேரில் வந்து கண்டெடுக்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டார். இந்த பணியின்போது இந்து சமய மேலூர் வட்டார அதிகாரி வாணி மகேஸ்வரி, துணை தாசில்தார் பூமாயி, மேலூர் டி.எஸ்.பி பிரபாகர் உள்ளிட்டோர் முன்னிலையில் பாதாள அறை திறக்கப்பட்டது.
ஏற்கனவே கோயிலில் சுவாமி உற்சவ புறப்பாடுக்கான வாகனங்கள் ஆலயத்தில் பழுதடைந்து காணப்படும் நிலையில் உற்சவர் சிலைகளான விநாயகர். அம்பாள், வேல் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வுக்கு பிறகே இவை எந்த மாதிரியான சிலை வகை என்பது தெரியவரும் என உதவி ஆணையர் விஜயன் தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
சென்னை
கல்வி
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion