சிவகங்கையில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் அதிரடி
வாரச்சந்தை பகுதிகளில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல். உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..
சிவகங்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனையில் 1 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 200 கிலோ அளவிலான கெட்டுப்போன மீன்கள் மற்றும் இறைச்சியை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
சிவகங்கை பஸ் நிலையம், மார்கெட், நேரு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, கப்புகள் உபயோகப் படுத்துவதாகவும் அதேபோல் அப்பகுதியில் செயல்பட்டுவரும் உணவகங்களில் கெட்டுப்போன உணவுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர் புகார் வந்ததை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து அப்பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சிவகங்கை வாரச்சந்தை பகுதிகளில்
— arunchinna (@arunreporter92) May 24, 2023
200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல். உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் உணவகம், பழக்கடை உள்ளிட்ட பல்வேறு உணவு நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.#sivagangai @LPRABHAKARANPR3 pic.twitter.com/6BKqf3xxMJ
இதில் பல்வேறு உணவு கடைகளிலும் கெட்டுப்போன இறைச்சி மற்றும் கலர் ரசாயன பொடிகள் பயன்படுத்திய உணவு பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்ததுடன் அரண்மனைவாசல் பகுதியில் மளிகை கடைக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்ததில் 1 டன் அளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீ கப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவரவே அவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதனை தொடர்ந்து வாரச்சந்தையிலும் இவர்களது சோதனை தொடர்ந்த நிலையில் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ அளவிலான அழுகிய மீன்கள் மற்றும் 50 கிலோ அளவிலான இறைச்சியையும் கைப்பற்றி அவற்றை அழித்தனர். மேலும் தடை செய்த பொருட்கள், கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் அளவிற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vaikasi Visakam: பக்தர்களே.. பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா; வரும் 27-ந் தேதி கொடியேற்றம்..!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்