மேலும் அறிய

பழனியில் 18 ஆம் நூற்றாண்டு சிவகெங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிப்பு

பழனி முருகனுக்கு  அளிக்கப்பட்ட நிலக் கொடை பற்றி எழுதப்பட்டிருக்கும் 18ம் நூற்றாண்டு சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் பல்வேறு சிறப்புகளை பெற்றது. உலகப்புகழ் பெற்ற ஆன்மீக ஸ்தலமாவும் விளங்குகிறது. இங்கு உள்ள முருகன் சிலை ஐம்பொன் சிலையாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மட்டும் வெளிநாட்டினரும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிக உண்டியல் காணிக்கை வசூல் செய்யும் முக்கிய இடமாகவும் உள்ளது.

GT vs RCB Innings Highlights: குஜராத்திற்காக அதிரடிகாட்டிய தமிழ் பசங்க ஷாரூக் கான் - சுதர்சன்; RCB-க்கு 201 ரன்கள் இலக்கு!

இந்த நிலையில் பழனியில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. பழனிமலைக் கோயில் திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம் என்பரின்  முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த  செப்பேட்டை  தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். கணியர் ஞானசேகரன் உதவியோடு செப்பேட்டை ஆராய்ந்த நாராயணமூர்த்தி கூறியதாவது: இந்த செப்பேடு சிவகங்கைச் சீமையின் அரசர் விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவர், பழனி முருகனுக்கு அளித்த பூமி தானம் எனும் நிலக்கொடையைப் பற்றிக் கூறுகிறது.

பழனியில் 18 ஆம் நூற்றாண்டு சிவகெங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிப்பு

செப்பேட்டை சிவகெங்கை அரசர், பழனியில் வசிக்கும்  காசிப்பண்டாரத்தின் மகன் பழனிமலைப் பண்டாரத்துக்கு வழங்கி உள்ளார். பழனிமலை முருகனுக்கு  திருக்காலச் சந்தி காலபூஜையில், திருவிளக்கு, திருமாலை, அபிசேகம், நைவேத்தியம் ஆகியவை தடைபடாமல் நடப்பதற்காக, தம்முடைய ஆட்சிப்பகுதியில் இருந்த முசுட்டாக்குறிச்சி, பெத்தனேந்தல், தேசிகனேந்தல், நாயனேந்தல், மருகதவல்லி, சின்னக்குளம் ஆகிய ஆறு ஊர்களை வரிகள் நீக்கி சர்வமானியமாகக் கொடுத்துள்ளார்.கொடை அளிக்கப்பட்ட. கிராமங்களின் நான்கெடைகளை செப்பேடு விரிவாகக் கூறுகிறது.

Breaking Tamil LIVE: ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா

பழனியில் 18 ஆம் நூற்றாண்டு சிவகெங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிப்பு

செப்பேட்டின் முகப்பில் மயில், சூரியசந்திரர்களுக்கிடையே வேல், வலது ஓரத்தில் அரசரின் உருவம் ஆகியவை கோட்டுருவமாகப்  பொறிக்கப்பட்டுள்ளன. 44 செ.மீ உயரமும் 25 செ.மீ அகலமும் உள்ள இச்செப்பேடு 875 கிராம் எடை உள்ளது. செப்பேட்டின் இருபுறமும் முன்பின் பக்கங்களில் 100 வரிகளில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. காலத்தைத் தவறாகக் குறிப்பிடும் இச்செப்பேட்டின் முன் பக்கம் முழுதும் விசையரகுநாத பெரிய உடையாத் தேவரின் 123 பட்டங்கள் புகழ்ச்சியுடன்  பொறிக்கப் பட்டுள்ளன.

TN Weather Update: வெயிலின் உக்ரம்.. 13 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. எங்கெல்லாம் வெப்ப அலை இருக்கும்?
பழனியில் 18 ஆம் நூற்றாண்டு சிவகெங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிப்பு

பின்பக்கம் 65 ஆம் வரிக்கு இடையில் தெலுங்கு மொழியில் 'ஆறுமுக ஸகாயம்' என்று எழுதப்பட்டுள்ளது. இது ஓர் ஆய்வுக்குரிய விசயமாகும். செப்பேட்டின் இறுதியில் இந்த தர்மத்தை பரிபாலனம் பண்ணிய பேர்கள் அடையும் புண்ணியத்தையும், கெடுதல் செய்தவர்கள் அடையும் தோசத்தையும் பற்றிய விரிவான செய்திகள் உள்ளன. இச்செப்பேட்டை தர்மராய பிள்ளையின் மகன் சொக்கு என்பவர் எழுதி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Suzuki e-Access Vs Ather 450: சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Embed widget