Breaking Tamil LIVE: ஆபாச வீடியோ விவகாரம்.. முன்னாள் பிரதமரின் பேரனுக்கு எதிராக வழக்குப்பதிவு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
- மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா அதன் நிறைவு பகுதியை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபம் என முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் வெகுசிறப்பாக நடைபெற்றது. தேனூர் மண்டபத்தில் இருந்து மீண்டும் தனது இருப்பிடம் நோக்கி கள்ளழகர் புறப்பட்டார். இன்று காலை அழகர்கோவில் வந்து சேர்ந்த கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கல் கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷங்கள் முழங்க மலர்களை தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
- ஷாங்காயில் நடந்து வரும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில்ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜோதி சுரேகா வென்னம் தலைமையிலான இந்திய வில்வித்தை வீரர்கள் 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர். உலகக்கோப்பை வில்வித்தையின் முதற்கட்ட போட்டிகள் ஏப்ரல் 23 ஆம் தேதி 28 ஆம் தேதி வரை ஷாங்காயில் நடைபெறுகிறது.
- மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் 2 கட்ட வாக்குப்பதிவு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் வித்தியாசமான பிரச்சார யுக்திகளை தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சர்ச்சையை கிளப்பும் ஆபாச வீடியோ.. சிக்கிய முன்னாள் பிரதமரின் பேரன்!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
#WATCH | Uttar Pradesh: Addressing a public rally in Kasganj, Union Home Minister Amit Shah says, "Rahul Baba is spreading lies in the name of backward classes. He says that if BJP wins 400 seats, BJP will remove reservation in the country. He doesn't understand, that we had two… pic.twitter.com/iFXLuNC14w
— ANI (@ANI) April 28, 2024
திருநங்கைகள் பொறுப்புணர்ந்து இந்த கலாச்சார மரபை காப்பற்ற முன்வர வேண்டும் - இயக்குநர் மோகன் ஜி
விழுப்புரம், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா 2000 ஆண்டு பாரம்பரியம், ஒரு சமூகத்தின் வரலாறு, ஆனால் இன்று அது திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறது, கலாச்சார சீர்கேட்டில் ஈடுபடும் சில NGO க்களின் சதி அம்பலப்பட்டால் மக்களின் கொந்தளிப்பை யாராலும் தடுக்க முடியாது, 1/2 pic.twitter.com/yakGuem5Es
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 28, 2024
Breaking Tamil LIVE: நிதிஒதுக்கீட்டில் மத்திய அரசு பச்சை துரோகம் - வைகோ கண்டனம்
தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பச்சைத் துரோகம் செய்வதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு ரூ. 37, 907 கோடி கேட்ட நிலையில் மத்திய அரசு வெறும் ரூ. 276 கோடியை ஒதுக்கியது.
Breaking Tamil LIVE: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்ற குகேஷ்.. நேரில் வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!
கனடாவில் நடந்த கேண்டிடேட் செஸ் தொடரை வென்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு குகேஷ் தகுதிபெற்றார். இதையடுத்து, உலக செஸ் சாம்பியன்சிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு தமிழ்நாடு சார்பில் ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகையா வழங்கப்பட்டது.