Madurai: தீண்டாமையை கடைபிடிக்காத கொடிக்குளம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு!
”மதுரையை சாதிய பாகுபாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க முயற்சி , பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டம்” மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் பேட்டியளித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உசிலம்பட்டி அருகே உள்ள கொடிக்குளம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்திற்காக பரிசு காசோலையை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மதுரை மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் இணைந்து கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா -விடம் வழங்கினர்.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடிக்குளம் ஊராட்சியில் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி வளர்ச்சிக்கு பரிசுத்தொகை 10லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார் @aneeshsekhar @UpdatesMadurai pic.twitter.com/OOoYDweKKf
— Arunchinna (@iamarunchinna) April 28, 2022
அதே போன்று சாதி பாகுபாடு இல்லாத ஒரு மாவட்டமாக மதுரையை உருவாக்குவதற்கு தான் இது போன்று முயற்சிகளை செய்கிறோம். தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவோம், பிரச்னைக்குரிய ஒரு சில கிராமங்கள் உள்ளன அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் என பேட்டியளித்தார்.#Madurai கொடிக்குளம் ஊராட்சியில் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி வளர்ச்சிக்கு பரிசுத்தொகை 10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. @aneeshsekhar @UpdatesMadurai #usilampatti #abpnadu | @TRBRajaa @Kishoreamutha pic.twitter.com/Zynfojj2ev
— Arunchinna (@iamarunchinna) April 28, 2022