மேலும் அறிய

சரக்குக்கு பில் கொடுக்குறாங்க... அதிசயமாய் பார்க்கும் மது பிரியர்கள்... நம்ப டாஸ்மாக்கா இது ?

Tasmac Bill : காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் டிஜிட்டல் முறையிலான மதுபான விற்பனை துவங்கியது.

மதுபான பாட்டில்களை ஸ்கேனர் மிஷின் மூலம் ஸ்கேன் செய்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பில்லுடன் மதுபான பாட்டிலையும் மதுபான கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர். ஸ்கேன் செய்து பில் போடுவதற்கு கூடுதல் நேரம் பிடிப்பதால் ஏராளமான மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் வருமானமும்

தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு டாஸ்மாக் கடைகளை நடத்துவதால் பல்வேறு விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில், விற்பனையும் மாதம் மாதம் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 


சரக்குக்கு பில் கொடுக்குறாங்க... அதிசயமாய் பார்க்கும் மது பிரியர்கள்... நம்ப டாஸ்மாக்கா இது ?

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு குவாட்டர் மது பாட்டில் வாங்கினால் பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்பதாக தொடர்ந்து வீடியோக்குள் வெளியாகியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

தொடர்ந்து எழுந்த விமர்சனங்கள் 

சில மாதங்களுக்கு முன்பு மது குடிப்பவர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் கூடுதல் பணம் வைத்து விற்பது தொடர்பான வாக்குவாதங்கள் கூட எழுந்தது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகம் வசூல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விவகாரத்தில் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையில் இறங்கியது.


சரக்குக்கு பில் கொடுக்குறாங்க... அதிசயமாய் பார்க்கும் மது பிரியர்கள்... நம்ப டாஸ்மாக்கா இது ?

பில் கொடுக்க முடிவு செய்த டாஸ்மாக் நிறுவனம்

இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பில் கொடுப்பது, ஆன்லைன் மூலம் பேமெண்ட் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ய அரசு முடிவு செய்தது. இதற்காக க்யூ ஆர் கோடு பொருத்திய மது பாட்டில்கள் தயாரிப்பதையும் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால், மதுபாட்டினில் விலையை உறுதிப்படுத்திக் கொண்டு அதே விலையில் பில் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

 டிஜிட்டல் முறை விற்பனை

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுமார் 220 டாஸ்மாக் கடைகளில், இன்று முதல் டிஜிட்டல் முறையில் மதுபானங்களுக்கு ரசீது மற்றும் qr கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மது பாட்டிலுக்கு நிர்ணிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


சரக்குக்கு பில் கொடுக்குறாங்க... அதிசயமாய் பார்க்கும் மது பிரியர்கள்... நம்ப டாஸ்மாக்கா இது ?

இனி ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பதால் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பில் போடுவதற்கு கூடுதல் நேரம் பிடிப்பதால் ஏராளமான மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஒரு சிலர் டாஸ்மாக்கில் பில் கொடுப்பார்கள் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என தெரிவித்துவிட்டு செல்கின்றனர். பழைய மதுபாட்டில் இருக்கும் ஒரு சில கடைகளில் மட்டும் பில் வழங்கும் பணி தொடங்காமல் உள்ளது. பழைய மது பாட்டில்கள் அனைத்தும் விற்பனையானவுடன், புதிய பாட்டில்கள் வந்தவுடன் அந்த கடைகளிலும் பில் வழங்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் இந்த பணிகளை மாவட்ட முழுவதும், மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Mayiladuthurai: 300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Embed widget